அருள் முந்துறுத்த அன்புபொதி கிளவிகருத்தாடல் பொருண்மை

புதுவை குழந்தைசாமி, பஞ்சலிங்கபுரம்

                                          தொல்காப்பியம் மானுட மேன்மையை வாய்ப்பாக்கும் பல தரவுகளைக் கொண்டிலங்குகின்ற கலைக்களஞ்சியமாகத் திகழ்கின்றது. இயற்கை, பண்பாடு, மொழியியல், அணியியல், இலக்கிய அழகியல் / அமைப்பியல் / உணர்ச்சிகள் , அரசியல்/ போரியல், திறனாய்வியல் ஆகியவற்றை வகுத்துரைக்குமாறே நுட்பமான கருத்தாடல் நெறிகளையும் கருதத்தந்துள்ளது. மனித வாழ்க்கை இயக்கத்தில் சொல்லாடல் இன்றியமையாப் பணியை ஆற்றுவதைத் தொல்காப்பியம் கூற்று, மெய்ப்பாடு ஆகிய கலைச்சொற்களால் உணர்த்துகின்றது. அவற்றுள் அகத்திணைத் தலைமை மாந்தர்க்கிடையிலான [ இல்லற இணையர்] சொல்லாடல்களுள் ,

                                அருள் முந்துறுத்த அன்புபொதி கிளவி ( கற்பியல் நூற்பா 20)        

என்னும் தலைவி கூற்று நூற்பாவடி சுட்டுகின்ற கருத்தாடல் பொருண்மை உன்னத்தக்கதாகும். யார், எதை, எதற்காக, எப்போது, யாடரிம் உரைக்கின்றனர் என்பனவற்றுகேற்பக் கருத்தாடற் சூழல் அமையும். இது உலக வழக்கறிந்து இயற்றப்பட்ட இலக்கணமாகும். அதன்படி தலைவன் தலைவியிடம் அன்புமிகுதியால் பணிவான / அன்புமிகுந்த சொற்களைக் கூறுவான்; அவ்வாறே தலைவியும் அன்பைப் பரிமாறுவாள். இதில் பாவனைத் தன்மை இல்லாமல் உண்மை இருக்கும். இவ்வாறான சொல்லாடலை அனைத்து இடங்களிலும் அனைவரும் பேசினால் சமூக நல்லிணக்கமும் நிறைவான இல்லறமும் உறுதியான நட்பும் வாய்க்கும்.

 நன்றி: இணையத் தரவுகள்                       *********     

     

Comments

Popular posts from this blog

தற்காலப் பொருண்மையியல் ஆய்வுக்குத் தொல்காப்பியத்தின் கருத்தளிப்பு