அமக்களம் – வழக்குப் பொருண்மை
புதுவை குழந்தைசாமி, பஞ்சலிங்கபுரம்
தமிழ்
இரட்டை வழக்குடையது. அதனால் மக்கள் பேச்சிலும் புலவோர் படைப்பிலும் ஒரு சொல் சற்று
வேறுபாட்டுடன் இயல்கின்றது. ஆயினும் இவ் இரண்டு
வழக்குகளையும் இணைத்து நோக்கின் தெளிவு வாய்ப்பாகும்.
’இவ
அமக்களம் பன்றான்’ என்று
தாய் தன் மகனைக் கடிகின்றாள். அதாவது தனக்குப் பிடிக்காதவற்றையும்
துன்பம் விளைப்பனவற்றையும் இவன் செய்கின்றான்; அடங்க மறுக்கின்றான்
என்பது இதன் கருத்து.
அமர்க்களம் என்பதன் திரிபு இவ் அமக்களம்.
அமர்க்களம்
என்பது கலகமான
இடத்தை, தனக்குப் பிடிக்காதவற்றையும் துன்பம் விளைப்பனவற்றையும்
போர்க் களத்தையும் குறிப்பதாகும். இதில் அமர் என்னும்
பழஞ்சொல் சண்டை / முரண்பாடு என்னும் கருத்திலானது. அமர் நிகழ்கின்ற பகுதி அமர்க்களம் எனப்படுகின்றது. இது அமர்
என்னும் பெயரின் அடிப்படையில் தோன்றியதாகும். தகையணங்குறுத்தல் அதிகாரத்தில் 1083,
1084 ஆகிய குறட்பாக்களில் இச் சொல்லை வினைப் பொருண்மையியல்,
கண்டார் உயிருண்ணும் தோற்றத்தால் பெண்டகைப்
பேதைக்கு அமர்த்தன கண்
(1084)
என்றவாறு, வருத்துதல் என்னும் கருத்தில் திருவள்ளுவர் ஆண்டுள்ளார். இவ்வாறு சொல்லின் கருத்தைத்
தெளிந்து இலக்கியப் பயனைச் செவ்வனே நுகரலாம்.
நன்றி: இணையத் தரவுகள் *******
Comments
Post a Comment