பண்புவள்ளுவ உளவியல்

புதுவை குழந்தைசாமி, பஞ்சலிங்கபுரம்

 

                பலதுறைக் கருத்துகளால் மானுட வெற்றியை வாய்ப்பாக்க வழிவகுக் கின்ற வள்ளுவம் மாந்த உளவியல் கருத்துகளையும் வகுத்துரைக்கின்றது. அம் மரபில் பண்பு என்கின்ற மனித எண்ண ஓட்டம் / செயல் / திறன் / இயல்பு போன்றவற்ரைச் சுட்டுகின்ற  உளவியல் கலைச்சொல்லையும் நுட்பமாக ஆண்டுள்ளது. ஒன்றன் வடிவம், நிறம், சுவை போன்ற குணங்களையும் இயல்பையும், மனிதனின் எண்ணப் போக்கையும்  செயல்திறனையும்  குறிப்பதாக இச் சொல் வழங்கப்படுகின்றது. வள்ளுவத்தில் கீழ்வருகின்ற  குறட்பாக்களில் இச் சொல் பல வடிவங்களில் பயில்கின்றது:

            14, 45, 62, 97, 194, 389, 469, 579, 681, 683, 688, 700, 783, 810, 811, 851, 865, 871, 874, 912, 937, 955, 991, 992, 993, 994, 955, 995, 996, 997, 998, 1000, 1181.

            இவற்றுள் 681, 683, 688 ஆகியவை தவிர்ந்த மற்ற குறட்பாக்களில் அடையாகக் குறட்பாக்களின் இடையில் இயல்கின்றது. ஆனால் 681, 683, 688 ஆகிய மூன்றிலும், இறுதிச் சொல்லாக பிறப்பு என்னும் வாய்பாட்டில் அமைந்து தகுதியை / திறனை விளக்குகின்ற துறைச்சொல்லாக விளங்குகின்றது.

அன்புடைமை ஆன்ற குடிப்பிறத்தல் வேந்தவாம்
பண்புடைமை தூதுரைப்பான் பண்பு (681)

நூலாருள் நூல்வல்லன் ஆகுதல் வேலாருள்
வென்றி வினையுரைப்பான் பண்பு (683)

தூய்மை துணைமை துணிவுடைமை இம்மூன்றின்
வாய்மை வழியுரைப்பான் பண்பு ( 688)

தூது அதிகாரத்தில் உள்ள இவற்றில் தூதனின் இலக்கணத்தையும், இயல்பையும் வள்ளுவர் உணர்த்துகின்றார் என்பதோடு  இவண் வள்ளுவர் வகுத்துரைக்கின்ற பண்புகளை வளர்த்துக்கொண்டால் தூதும் சிறக்கும்; தூதனும் புகழடைவான். இங்ஙனம்  வள்ளுவம் சீர்மைக்கும் வளமைக்கும் தனிமனித மேன்மைக்கும் வழிவகுக்கின்றது ; வள்ளுவம் தெளிந்தால் ஒளிரலாம்.

            நன்றி: இணையத் தரவுகள்                                  ******

Comments

Popular posts from this blog

தற்காலப் பொருண்மையியல் ஆய்வுக்குத் தொல்காப்பியத்தின் கருத்தளிப்பு