இனியவை கூறல் : பயன் நோக்கு 

                                             Utilitarianism in Good-natured conversation 

   புதுவை குழந்தைசாமி, பஞ்சலிங்கபுரம்

            மனித வாழ்க்கையில் கருத்து/உணர்வுப் பகிர்வு முதன்மையான இடத்தைப் பெறுகின்றது. அதனால் பேசல்-கேட்டல் நெறிகளை அற இலக்கியங்கள் வகுத்துரைக்கின்றன. நட்பாடல், உறவியல், வேலைவாய்ப்பு, வணிகம், அரசியல், படைப்பாக்கம், ஊடகங்கள் ஆகிய தளங்களில் இத்தகைய ஆக்க இன்பகிர்வு பயன் நோக்கில் மக்களால் எதிர்பார்க்கப்படுகின்றது. சொல்லாடலில் உரிய, எளிய, இனிய, பயன்மிக்க சொற்களை ஆளவேண்டும் என்றும், ஒவ்வொரு சொல்லாடலும் மிகுபயனை விளைவிக்கவேண்டும் என்றும் மாந்தர் விழைகின்றனர். அதனால் இனியவை கூறுக என்று வள்ளுவம் வலியுறுத்துகின்றது. சான்றாக,

நயன்ஈன்று நன்றி பயக்கும் பயன்ஈன்று
பண்பின் தலைப்பிரியாச்
சொல் (97)

என்னும் குறட்பாவில், பண்பாட்டு மரபோடு இனிமையாகவும் பயனுள்ளதாகவும் ஆற்றப்படுகின்ற கருத்தாடலால் சமூக மதிப்பு, பொருள் வரவு, நல்லிணக்கம் ஆகிய மூன்றும் வாய்ப்பாகும் என்று அறமுரைக்கின்றது. ”பிறரால் விரும்பப்படுதலையும் பயந்து, பொருளையும் பயந்து, அறத்தினையும் பயக்கும், குணத்தினின்று நீங்காத சொல்” என்னும் மணக்குடவர் உரை இவண் உன்னத்தக்கது. அதாவது பேசப்படுகின்ற ஒவ்வொரு சொல்லையும் சூழல், பொருள், சமூக உறவு, அறிதிறன், மொழித் திறன் ஆகியவற்றைக் கருதித் திட்டமிட்டுப் பயனுள்ளதாக விடுக்கவேண்டும். இதனால் விழைகின்ற பயன் வாய்ப்பாகும்; மனித உறவு வலுப்பெறும். இவ்வாறே இனியவை கூறல் அதிகாரத்தின் மற்ற குறட்பாக்களையும் நோக்கலாம். இவை மானிட வெற்றிக்கான கொள்கை வரைவுகளாகத் திகழ்கின்றன. தத்துவவியலில் கடந்த மூன்று நூற்றாண்டுகளாக வளர்ந்துவருகின்ற பயன் நோக்கம் வள்ளுவரால் நுட்பமாக விளக்கப்பட்டுள்ளமை பாராட்டிப் பயன்கொள்ளத்தக்கதாகும்.

நன்றி: இணையத் தரவுகள்                *******

Comments

Popular posts from this blog

தற்காலப் பொருண்மையியல் ஆய்வுக்குத் தொல்காப்பியத்தின் கருத்தளிப்பு