தகைமாண்ட தக்கார் யார் ?
புதுவை குழந்தைசாமி, பஞ்சலிங்கபுரம்
உலகில் வாழ்கின்ற மக்கள் அனைவரும் இணையானோர்.
ஆனால் பண்பில் / திறனில் வேறுபடுவர். ஒருவர் அனைத்து அடிப்படைப் பண்புகளிலும் அறவோனாக
விளங்கினால் / எடுத்துக்காட்டாகத் திகழ்ந்தால் / நல்லெண்ணங்களை வாய்ப்பாக்கினால்; மண்ணில்
நல்லவண்ணம் வாழ்ந்தால் அவரைத் தகைமாண்ட தக்கார் என்று வள்ளுவம் அடையாளப்படுத்துகின்றது. அடுத்து,
இத்தகைய பெருமை சான்ற ஆன்றோர் சினக்கும்படி செயலாற்றலாகாது என்று அறிவுறுத்துகின்றது.
ஆன்றோர் வெகுளார்; கொடுஞ்செயல் புரிந்தால் மட்டுமே அவர்கள் சினப்பர்: ஆயினும் அதனால்
பெரும்பொருளும் பேரழிவுறும் என்பதை,
வகைமாண்ட வாழ்க்கையும் வான்பொருளும்
என்னாம்
தகைமாண்ட
தக்கார் செறின் ( 897)
என்னும் குறட்பாவில்
எச்சரிக்கின்றார். இதில், , “என்ன ஆகும் ?”
[ என்னாம்? ]என்று வினவி, இவ் வினா மூலம் ,பேரழிவு ஏற்படும் என்பதை
உறுதிப்படுத்துகின்றார். இந்தக் குறட்பாவால்,
v
ஒருவன் வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்து தகைமாண்ட தக்காராகச் சிறக்கலாம். இத்தகையோர் பிறழ் உணச்சிகளுக்கு
இடந்தரலாகாது.
v
சான்றோர் வெறுப்புக்கு உள்ளானால் சிறந்த செல்வ வாழ்க்கையும் மிகு பொருளும் அழியும்.
இங்ஙனம்
ஒவ்வொரு சொல்லிலும் வள்ளுவம் விழுமியத்தைப் புதைத்து வைத்து, மேன்மையான வாழ்க்கைக்கு
வழிவகுக்கின்றது.
நன்றி:
இணையத் தரவுகள் ********
Comments
Post a Comment