வள்ளுவத்தில் ‘அமர்’ – பொருட்பன்மை

புதுவை குழந்தைசாமி, பஞ்சலிங்கபுரம்

                இலக்கியம் மனித வாழ்க்கையிலிருந்து தோன்றி, மானுட வெற்றியை வாய்ப்பாக்க விழைகின்றது. அதற்கு இலக்கியத்தின் பாடுபொருளை / விழுமியத்தைக் கொண்டிருக்கின்ற ஒவ்வொரு சொல்லையும் / கருத்தையும் தெளியவேண்டும். திருக்குறளின் சொல்லாட்சி நுட்பமானது. அதனால் வள்ளுவச் சொற்களைச் சூழல் நோக்கிக் கருத்துணரலாம். இந் நிலையில் ‘அமர்’ என்னும் பழந்தமிழ்ச் சொல் வள்ளுவத்தில் பெயராகவும் வினையாகவும் பொருட்பன்மையில் இயல்வதைச் சுட்டுவதாக இக் குறிப்புரை இயல்கின்றது.

அமர்:

            பழங்காலத்திலிருந்து  போர் என்று பெயராகவும், விரும்பி உறை / உட்கார் என்னும் பொருளில் வினையாகவும் பொருட்பன்மையில் ‘அமர்’ வழங்குகின்றது. மொழி மரபைப் போற்றுகின்ற திருக்குறளும் இந்த நிலையைப் போற்றியுள்ளது.

அமரகத்து ஆற்றறுக்கும் கல்லாமா அன்னார்
தமரின் தனிமை தலை (814)

என்னும் குறட்பாவில் போர் என்னும் கருத்தில் முதனிலைத் தொழிற்பெயராக இயல்கின்றது. அடுத்து,

அகனமர்ந்து செய்யாள் உறையும் முகனமர்ந்து
நல்விருந்து ஓம்புவான் இல் (814)

என்று அமர் என்னும் சொல் உறைதல்,  இனிமையாதல்  என்று செயப்படுபொருள் குன்றிய வினையாக இயல்கின்றது.

            இவ்வாறு இலக்கண / தொடரியல் / பொருண்மையியல் நோக்கில் வள்ளுவத்தின் ஒவ்வொரு சொல்லையும் அணுகினால் திருக்குறளின் விளம்பு பொருளைத் தெளியலாம்.

 நன்றி: இணையத் தரவுகள்          ***********

 

Comments

Popular posts from this blog

தற்காலப் பொருண்மையியல் ஆய்வுக்குத் தொல்காப்பியத்தின் கருத்தளிப்பு