வள்ளுவம் ‘பயக்கும்’ – விழுமியப் பொருண்மை
புதுவை குழந்தைசாமி, பஞ்சலிங்கபுரம்
அற இலக்கியமான திருக்குறள் மானுட மேன்மைக்கான விழுமியங்களை
விண்டுரைக்கின்றது. அப்போது
இதை இப்படிச் செய்தால் இத்தகைய பேறு விளையும் என்று ஊக்கியும்; இதனால் இன்ன கேடு நேரும் என்பதை எடுத்துரைத்து எச்சரித்தும், எண்ணச் சீரமைவை வாய்ப்பாக்குகின்றது. இதற்குரிய
சொற்களை, அறவியல் கலைச்சொற்களாக வள்ளுவம் ஆள்கின்றது.
எனவே ஒவ்வொரு சொல்லையும் சூழல் நோக்கிக் கருத்துணரவேண்டும். இந் நிலையில் ‘பயக்கும்’ என்னும் வினைச்சொல் நற்பயன் விளைவைச் சுட்டுவதை, நன்மையின்பால் மாந்தரைத்
திசை திருப்புவதை எடுத்துரைப்பதாக இக் குறிப்புரை இயல்கின்றது. கீழ்வருகின்ற அட்டவணை இச் சொல் வரவை வரிசைப்படுத்துகின்றது:
|
குறட்பா எண் |
சொல் வடிவம் |
கருத்து |
|
97 |
பயக்கும் |
நன்மையளிக்கும் |
|
123 |
பயக்கும் |
பெருமையைக்
கொடுக்கும் |
|
292 |
பயக்கும் |
குற்றமற்ற
நன்மையளிக்கும் |
|
352 |
பயக்கும் |
இன்ப நிலையைக்கொடுக்கும் |
|
461 |
பயக்கும் |
பயன் கிடைக்கும் |
|
659 |
பயக்கும் |
பலன் கொடுக்கும் |
|
669 |
பயக்கும் |
இன்பம் கொடுக்கும் |
|
854 |
பயக்கும் |
இன்பம் கொடுக்கும் |
இவ் அடைவால் கொடுக்கும்; கிடைக்கும் ஆகிய கருத்தில் ’பயக்கும்’ பயில்வதைத் தெளியலாம். அடுத்து, இதன்வழி வள்ளுவம் விண்டுரைக்கின்ற விழுமியங்கள் வருமாறு:
Ø பண்பான, பயனுள்ள, இனிய சொற்களைப்
பேசுக!
Ø அடக்கத்துடன் வாழ்வதே அறிவுடைமை; அது பெருமையைக் கொடுக்கும்
Ø கருத்தாடல் குற்றமற்ற நன்மையை விளைவிக்கவேண்டும்.
Ø அறியாமை/ மயக்கம் தெளிந்து மாசற்ற உண்மையை உணரவேண்டும்
Ø விளைவை ஆராய்ந்து செயலாற்ற வேண்டும்
Ø பிறரை வருத்தாமல், அற வழியில் பொருளீட்டுக!
Ø பயனுள்ள செயலைத் துணிவுடன், துன்பம் பாராமல் செய்து சாதிக்கவும்.
Ø பகையுணர்வை அண்ட விடாதீர்!
இவ்வாறு
அறமுரைக்க வள்ளுவம் பயக்கும் என்னும் சொல்லை ஆண்டுள்ளது. இங்ஙனம் அற நூல்கள் வாய்ப்பாக்க
விழைகின்ற விழுமியங்களைத் தெளிந்தால், அனைவரும் வையத்துள் வாழ்வாங்கு
வாழ்ந்து சிறக்கலாம்.
நன்றி : இணையத் தரவுகள். **********
Comments
Post a Comment