வள்ளுவம் கண்ட ‘ எழில்’ : கருத்துப் பொருண்மை
முனைவர் ப. கொழந்தசாமி,
அரசினர் ஆய்வு நிறுவனம், புதுச்சேரி.
வளமான தமிழ் மொழியில் படைக்கப்பட்ட
வள்ளுவம், சொல்லாட்சித் தளத்தில் அய்வுச் செம்மை செறிந்ததாக இலங்குகின்றது.
உயர்தனிச் செம்மொழியாம் தமிழில் ஒருபொருட்பல சொல், பலபொருளொரு சொல், ஒப்புருச் சொல் போல்வன தொன்மைக் காலந்தொட்டு
இயல்வதைத் தொல்காப்பியம் திரிசொல் என்று எச்சவியலின் முதல் நூற்பாவில் குறிப்பிடுகின்றது.
அவ் வகையில் எழில் என்னும் , தோற்றப் பொலிவைக்
குறிக்கின்ற பெயர்ச்சொல் வள்ளுவத்தில் இயலுமாற்றை விளக்குவதாக இக் கட்டுரை அமைகின்றது.
நுண்மாண்
நுழைபுலம் இல்லான் எழில்நலம்
மண்மாண் புனைபாவை அற்று ( 407 )
என்னும் குறட்பாவில் அழகான, எழுச்சி மிக்க தோற்றம் என்னும் பொருளில் எழில் பயில்கின்றது. தொல்காப்பியத்தின் 1192ஆம் நூற்பாவில் , கட்புலனாகாத நுண்பொருண்மை உணர்ச்சிகளுள் ஒன்றாக, அழகான
தோற்றம் என்னும் பொருளில் எழில் சுட்டப்பட்டுள்ளமை இவண் ஒப்பத்தக்கது.
______
Comments
Post a Comment