அவம்: வள்ளுவ மானுடச் சிதைவுப் பொருண்மை

                                          பஞ்சலிங்கபுரம் குழந்தைசாமி, புதுவை

பேச்சொலிகளால் சொற்களும் சொற்களால் தொடர்களும் ஆக்கப்பட்டுக் கருத்து / உணர்ச்சிப் பரிமாற்றம் நிகழ்த்தப்படுகின்றது. சொற்கள் எண்ணங்களையும் செய்திகளையும் வெளிப்படுத்துகின்றன. அதனால் ஒவ்வொரு சொல்லிலும் புதைந்துள்ள மனிதவளப் பொருண்மையைக் கூர்ந்து அறியவேண்டும். அதனால் வாழ்க்கை வளப்படும்.

மானுட மேம்பாட்டை வகுத்துரைக்கின்ற வள்ளுவம் அவம்  என்னும் பெயர்ச்சொல்லால் சிதைந்து விடாதே என்னும் எச்சரிக்கையை விடுக்கின்றது. தவம், அறநெறி ஆகியவை வளத்தை மிகுவிப்பன; அவம் என்பது பயன்தராத, கேடு விளைக்கின்ற செயல்பாடு. அதனால்.

 தவமும் தவமுடையார்க்கு ஆகும் ; அவம் அதனை
               அஃதிலார் மேற்கொள் வது ( 262)

என்னும் குறட்பாவில் முன்னேற்றச் சிந்தனையும் நேர்மறை அணுகுமுறையும் வாழ்க்கையை வளப்படுத்தும். வீண் முயற்சியாலும் பொருத்தமற்ற அணுகுமுறையாலும் பயன் விளையாது என்று முன்னேற்றச் சிந்தனையை வலியுறுத்துகின்றது. அடுத்து,

            தவஞ்செய்வார் தங்கருமஞ் செய்வார்; மற்றல்லார்
 `              அவம் செய்வார் ஆசையுட்பட்டு (266)

என்று, பேராசையால் தவறான போக்கில் சென்றால் சிதைவும் கேடும் நேரும்  என்று எச்சரிக்கின்றது.

                இங்கு, தவம் என்பதை முன்னேற்ற நல்வாய்ப்பு / நேர்மறை அணுகுமுறை என்றும், அவம் என்பதை பயனற்ற முயற்சி/ கேடு என்றும் தெளியலாம்.

                இவ்வாறு திருக்குறளின் ஒவ்வொரு சொல்லிலும் புதைந்துள்ள மனிதவளக் கருத்துகளை நோக்கி அறியின், தடுமாற்றமற்ற நிலைத்த நீடித்த வளமான இன்வாழ்க்கை வசப்படும்.

 நன்றி : இணையத் தரவுகள்.                                 *******

Comments

Popular posts from this blog

தற்காலப் பொருண்மையியல் ஆய்வுக்குத் தொல்காப்பியத்தின் கருத்தளிப்பு