மதுரைக்காஞ்சியில் ”காழ்” – ஒப்புருப் பொருண்மை

புதுச்சேரி குழந்தைசாமி, பஞ்சலிங்கபுரம்

பாப் புனைவோர் மொழித்திறன் வாய்ப்பால் சொல் விளையாட்டில், ஒரே இலக்கண வகையில் ஒரு வடிவத்தில் பல கருத்தில் சொல்லைக் கையாளுகின்றனர். தமிழின் சொல் வளமும் பொருண்மைக் கட்டமைப்பும் இதை வாய்ப்பாக்குகின்றன. இந் நிலையில் மதுரைக்காஞ்சியில் காழ் என்னும் பெயர்ச்சொல் ஒப்புருச் சொல்லாக இயல்வதை விளக்குவதாக இக் குறிப்புரை அமைகின்றது.

·         காழ்: கருத்து:   காழ்பெயர்ச்சொல். (https://ta.wiktionary.org/wiki/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D)

1.    மரவயிரம்விறகுகாம்புகழி

2.    மனவுறுதி

3.    கட்டுத்தறி

4.    தூண்கதவின் தாழ்

5.    ஓடத்தண்டு

6.    இரும்புக் கம்பி

7.    யானைப் பரிகோல்

8.    இரத்தினம்முத்துமணிவடம்

9.    பளிங்கு

10.  பூமாலைநூற்சரடு

11.  விதைகொட்டை

12.  கருமை

13.  குற்றம்

 

இங்ஙனம் பல பொருள் கொண்ட இச் சொல், தொல்காப்பிய நூற்பா 365இல்  விதை என்றும், நூற்பா 1589இல் மரத்தின் உள்ளீடு என்னும் கருத்திலும் பயில்கின்றது. பத்துப்பாட்டுள் 782 அடிகளால் இயன்ற மதுரைக்காஞ்சியில் காழ் என்னும் பெயர்ச்சொல்,

            நறுங்காழ் கொன்று…… ( அடி 286)                                 = சந்தன மரம்

                வன்தொடர் பேணாது காழ் சாய்த்து ( அடி 382) = வலிமையான கட்டுத்தறிக் கம்பம்

            திண் காழ் ( அடி 449 )                                                             =  திண்ணிய கொடித் தண்டு

                ……. காழ் சாய்த்து ( அடி 621)                                                = சட்டக் கால்

             பரூஉக் காழ்…..((அடி 681)                                                    = ஆரம்

            திண் காழ் ஆரம் …. (அடி 715)                                            = சந்தன மர வயிரம்

            ஒண்காழ் ஆரம் … (அடி 716)                                     = வடம்

            காழ் மண்டு எஃகம்… (அடி 739)                                = வேலின் காம்பு

 

என்றவாறு ஒப்புருச் சொல்லாகப் பல கருத்தில் ஆளப்பட்டுள்ளது.

ஆயினும் திண்மை, வலிமை என்னும் பொருட்களத்தில் இவை இயல்கின்றன. இதனால் ஒரு பொருளின் திண்மை, வலிமை போன்றவற்றைத் தொல் தமிழர் அறிந்திருந்தமை வெள்ளிடைமலை. மேலும் இத்தகைய பொருண்மை விழிப்புணர்வோடு இலக்கியங்களை அணுகல் சீர்மை நல்கும்.

   நன்றி: இணையத் தரவுகள்                  ******  

  

Comments

Popular posts from this blog

தற்காலப் பொருண்மையியல் ஆய்வுக்குத் தொல்காப்பியத்தின் கருத்தளிப்பு