தலைமைக்கும் தகைமைக்கும் சான்றான ’காவிதி’யர்- காஞ்சிப் பொருண்மை
புதுச்சேரி
குழந்தைசாமி, பஞ்சலிங்கபுரம்
நிலைபேறுடைய
மானுட மதிப்புகளின் கலனாகத் திகழ்கின்ற சங்கப் பாக்கள் பொதுமேலாண்மையியல் கொள்கைகளையும்
எடுத்துரைக்கின்றன. அவற்றுள் காவிதிப் பட்டம் என்பதும் ஒன்றாகும். பத்துப்பாட்டில்
நீண்ட பாடலான மதுரைக்காஞ்சி அரிய கருத்துகளை
ஆவணப்படுத்தும்போது அரசிடமிருந்து காவிதிப் பட்டம் பெற்ற அமைச்சர்களின் தலைமை/ தகைமை
மேன்மைகளை விண்டுரைக்கின்றது. மாங்குடி மருதனார் இயற்றிய மதுரைக்காஞ்சியின்,
மாவிசும்பு வழங்கும் பெரியோர் போல
நன்றும் தீதும் கண்டுஆய்ந்து அடக்கி
அன்பும் அறனும் ஒழியாது காத்துப்
பழியொரீஇ உயர்ந்து பாய்புகழ் நிறைந்த
செம்மை சான்ற காவிதி மாக்கள் ( அடிகள் 495 -499
)
என்னும் அடிகள் காவிதியாரின்
தகைமைகளைப் பின்வருமாறு பட்டியலிடுகின்றது:
v இதற்கு
முன் வாழ்ந்த அறச் சான்றோரைப் போன்றோர்
v நல்லதன்
நன்மையையும் தீயதன் தீமையையும் உணர்ந்தவர்கள்
v அதனால்
தீய வழியில் செல்லாமல் புலனடக்கம் பேணுபவர்கள்
v தன்மீது
பழி ஏற்படாமல் விழிப்பாக நடப்போர்
v மன்னன்/மக்கள்
மனத்தில் உயர்ந்து நிற்போர்
v நின்று
நிலைத்துப் பெருகுகின்ற வளர் புகழுடையவர்கள்
v திறனும்
தகைமையும் மேன்மையும் தங்கியோர்
இத்தகைய பண்புகளைக் கொண்ட அமைச்சோரால் நாடு நலம்பெற்றது.
இவற்றை இன்றைய அதிகாரிகளும் மேலாளர்களும் பெற்று நலமுறலாம். நல்லாட்சி அனைத்து நிலைகளிலும்
வளம் பெருக்கும்; அதனால் மானுடம் வெல்லும்..
நன்றி : இணையத் தரவுகள் ******
Comments
Post a Comment