தொல்காப்பியம் சுட்டுகின்ற களவழிகள்

புதுச்சேரி குழந்தைசாமி, பஞ்சலிங்கபுரம்

                தொல்காப்பியப் புறத்திணையியல் உலா, பிள்ளைத்தமிழ் போன்ற இலக்கியத் தோற்றத்திற்கான வாய்ப்புகளைச் சுட்டுமாறே வெற்றியைப் பாராட்டுகின்ற களவழி இலக்கிய வகைமையையும்  வெளிப்படுத்துகின்றது. புறத்திணையியலின் வாகைத் திணை பற்றிய 17ஆம் நூற்பாவின் 03ஆம் அடி,

                           ஏரோர் களவழி அன்றிக் களவழி

என்று இரண்டு களவழி இலக்கியங்களைக் குறிக்கின்றது. களவழி நாற்பது, கலிங்கத்துப்பரணி ஆகியன இவண் எண்ணத்தக்கன. அதனால் பொருநரை ஏர்க்களம்/ போர்க்களம் பாடுநர் என்று அடையாளப்படுத்தினர். அதாவது உழவின் விளைச்சல் வெற்றியைக் களத்திலும் போரின் வெற்றியைப் போர்க்களத்திலும் பொருநர் பாராட்டிப் புகழ்வதாகும். இன்றும் அறுவடை செய்த பயிர்களிலிருந்து தானியத்தைப் பிரிக்கின்ற வெளியைக் களம் என்று கூறுகின்றனர். இங்குத் தானியத்தைக் கொடை வழங்குகின்றனர். மானுட வெற்றி எப்போதும் அனைவராலும் பாராட்டப்படும்; பொங்கல் விழா இந் நிலையில் ஒப்பத்தக்கது.

நன்றி: இணையத் தரவுகள்                  *****

Comments

Popular posts from this blog

தற்காலப் பொருண்மையியல் ஆய்வுக்குத் தொல்காப்பியத்தின் கருத்தளிப்பு