பால்கெழு கிளவி: இலக்கணப் பக்கச் சொல்
புதுவை குழந்தைசாமி, பஞ்சலிங்கபுரம்
செம்மொழியான தமிழின் தொன்மையான விளக்கவியல் இலக்கணமான தொல்காப்பியம் ஒவ்வொரு நூற்பாவிலும் தமிழ்ப் பொருண்மைக்
கோட்பாட்டை வகுத்துரைக்கின்றது. அதன்படி பொருளதிகாரத்தின் ஐந்தாம் இயலான பொருளியல் இலக்கியப்
பொருண்மையை , அதாவது பாடலின் நுண்பொருளை அறியும் நுட்பத்தை இலக்கணவியல்
/ இலக்கியவியல் பாங்கில் எடுத்துரைக்கின்றது. இவ் இயலின் ஐந்தாம்
நூற்பா,
பால்கெழு கிளவி நால்வர்க்கும் உரித்தே
என்று கதைமாந்தர்
கூற்று மரபினை எடுத்துரைக்கின்றது. அதாவது தோழி, செவிலி, நற்றாய், தலைவி ஆகிய பெண்பாலார், தன்னோடும்
பிற உயிரினங்களோடும் அன்பு மிகுந்த சொற்களைப் பேசுவதாகப் பாடல் அமைந்தால் மயங்காமல்
அதை ஏற்று, அதன் உளவியல் நோக்கத்தைப் புரிந்துகொள்ளவேண்டும். இந்தப் பால்கெழு
கிளவியை இலக்கணத்திற் பக்கச்சொல் என்று நூற்பா உரையில் நச்சர் சுட்டுகின்றார்.
அதாவது பிற உயிரினங்களைப் பெண்பாலாகப் பாவித்துப்
பாடுவதாகும். அகநானூற்றின் 165ஆம் பாடலில் நற்றாய் மணற்பாவையைப் பெண்ணாகக் கருதிப்
பேசுவதை இவண் சான்றாகக் கொள்ளலாம். அதனால் இத்தகைய சூழலில் அமைகின்ற உளவியற் பொருண்மையைத்
தெளிதல் சிறந்ததாகும்.
நன்றி: இணையத் தரவுகள். *******
Comments
Post a Comment