உறைப்புழியோலை = குடைதொடர்ப் பொருண்மை 

                                                          புதுவை குழந்தைசாமி, பஞ்சலிங்கபுரம்

வரலாறு, பண்பாடு, ஆட்சியியல், பட்டறிவு, உழவியல் போன்ற பல துறைக் கருத்துகளை இலக்கியங்களால் அறியலாம். அவ்வாறே மக்களின் புழங்கு பொருட்களையும் இலக்கியங்கள் ஆங்காங்கே சுட்டுகின்றன. அம் முறையில் பறநானூற்றின் 290ஆம் பாடலின் ஏழாம் அடியில் அவ்வையார், உறைப்புழியோலை என்று மழைக் குடையைக் குறிப்பிடுகின்றார். உறைப்பு + உழி+ ஓலை என்னும் மூன்று சொற்களால் இத் தொடர் ஆக்கப்பட்டுள்ளது. அக் காலத்தில் கொற்றக் குடை அரசச் சின்னமாக விளங்கியது. மக்கள் மழை பெய்கையில் பாதுகாப்புக்காகக் குடை பிடித்தனர். மூங்கில் குச்சியில் பனைதாழை, தென்னை ஆகியவற்றின் ஓலையைப் பின்னி அடுக்கிக் குடை செய்ததால் அது ஓலைக் குடை எனப்பட்டது. {நான் 1970களில் பள்ளிக்குத் தாழங்குடையை எடுத்துச்சென்றுள்ளேன்].

இளம் வீரனின் போராற்றலையும் காக்கின்ற கடமையுணர்வையும் பாராட்டுகின்ற அவ்வையார், பிடிப்பவனை மழை பெய்கையில் நனையாமல் குடை காக்குமாறு இவனும் உன்னைப் போர்க்களத்தில் காப்பான் என்று எடுத்துரைக்கின்றார். இத் தொடரில் உறைப்பு = மழை, உழி= நேரத்தில் [ ஏழாம் வேற்றுமையுருபு]  ஓலை= ஓலையால் பின்னப்பட்ட குடை [ முதலாகுபெயர்ஆகியன கருத்தறியத்தக்கன.  இங்ஙனம் இலக்கியங்களை அணுகின் புரிதிறனும் பெருமையும் வளப்படும்.

நன்றி : இணையத் தரவுகள்                          ********

 

Comments

Popular posts from this blog

தற்காலப் பொருண்மையியல் ஆய்வுக்குத் தொல்காப்பியத்தின் கருத்தளிப்பு