*பிற்றை நிலை – கல்வி உளவியல்*

                                பேராசிரியர் குழந்தைசாமி, பஞ்சலிங்கபுரம்

 இலக்கியங்கள் நிலைபேறுடைய மானுட மதிப்புகளை உரக்கப் பேசி, மானுட வளர்ச்சிக்கும் திறன் மேம்பாட்டிற்கும் வாய்ப்பாகின்றன. இம் முறையில் கல்வியியல் / உளவியல் கொள்கைகளையும் வகுத்துரைக்கின்றன. இந் நிலை தொல்பழங்காலம் தொட்டு இயல்கின்றது. புறநானூறு 183ஆம் பாவில்,

உற்றுழி உதவியும் உறுபொருள் கொடுத்தும்

பிற்றைநிலை முனியாது கற்றல் நன்றே

என்று பாண்டிய வேந்தன் கல்வியின் தேவையை வலியுறுத்துகின்றார். இது எக்காலத்திற்கும் பொருந்துகின்ற கொள்கையாகும். கற்பிப்பவருக்கு உதவுவதோடு, தான் எத்தகையவராயினும் வகுப்பில் மிகுதி காட்டாமல் , தேவையான பணிவோடு திகழ்ந்து கற்கவேண்டும். பணிவே அறிவு வளர்ச்சியின் அடிப்படை; கற்றலில் மட்டும் கருத்தூன்றவேண்டும்; தற்பெருமை தேவையில்லை என்னும் கல்வி உளவியலைப் பாண்டிய மன்னன் எடுத்துரைப்பதை மாணவர்க்கு உணர்த்தின் இளைஞர்களின் கற்றல் திறன் செழிக்கும்; பண்பாடு மிளிரும்: திறன் மிகும்.

நன்றி: இணையத் தரவுகள்                             -----------

Comments

Popular posts from this blog

தற்காலப் பொருண்மையியல் ஆய்வுக்குத் தொல்காப்பியத்தின் கருத்தளிப்பு