ஒரு பாவில் இரு கோதை - கருத்தாய்வு
புதுச்சேரி
குழந்தைசாமி, பஞ்சலிங்கபுரம்
தமிழ்
சொல் வளமும் பொருண்மைச் சீர்மையும் கொண்டதாகும். அதனால் ஒப்புருச் சொற்கள் செய்யுள்
வழக்கிலும் பேச்சுப் பயன்பாட்டிலும் இயல்கின்றன. பாவலர் இதைச் செவ்வனே ஆண்டு இலக்கிய
முருகியலை மிகுவித்து வேட்கையைத் தூண்டுவதோடு, மொழித் திறன் மேம்படவும் வாய்ப்பாகின்றனர்.
பொய்கையார்
சேரமான் கோக்கோதை மார்பனைப் பாடிய, புறநானூற்றின் 48ஆம் பாவின் முதல் ஈரடிகளில்,
கோதை மார்பின் கோதையானும்
கோதையைப் புணர்ந்தோர் கோதையானும்
என்று கோதை
என்னும் ஒப்புருப் பெயர்ச்சொல், இரண்டு வேறு கருத்தில் பயில்கின்றது.
பூ மாலை, அழகிய பெண், காற்று முதலிய பொருளில் இயல்கின்ற
கோதை என்னும் பெயர்ச்சொல் சேர வேந்தரின் பட்டப்பெயராகவும் ஆளப்படுகின்றது.
மேற்காட்டப்பட்ட புறப் பாடலின் ஈரடிகளிலும்
தொடக்கத்தில் சேரனையும் அடுத்து நறுமண மாலையையும் குறிப்பதாக, கோதை என்னும் ஒப்புருச்
சொல் இயன்று, முருகியல் பயப்பதோடு, படைப்பாளிக்கும் வழிகாட்டுகின்றது. இத்தகைய சொற்பொருண்மை
நோக்கு இலக்கியப் புரிதிறனைச் செம்மையாக்குவதோடு பொருண்மை வளத்தையும் வெளிப்படுத்தும்.
நன்றி : இணையத் தரவுகள் ******
Comments
Post a Comment