‘மேல்’ – கொங்கு வட்டார வழக்குப் பொருண்மை
புதுச்சேரி
குழந்தைசாமி, பஞ்சலிங்கபுரம்
தமிழ்
இரட்டை வழக்கினது; அதோடு வட்டாரச் சொல்வளமும் கொண்டது. மக்களின் படைப்பாற்றலால் நாட்டுப்புற
இலக்கியங்கள், பழமொழிகள், விடுகதை, வீரக் காப்பியங்கள் போல்வன தோன்றுவது போலச் சொற்களும்
ஆக்கப்படுகின்றன. இத்தகைய சொற்களின் பொருளை அவ் வட்டாரத்தினர் இயல்பாக அறிவர். ஆனால்
பிற வட்டாரத்தினர் கற்றால் மட்டும் கருத்துணரமுடியும். இதற்காக வட்டார வழக்கு அகராதிகள்
ஆக்கப்படுகின்றன.
இந் நிலையில் உடலின் கழுத்திற்குக் கீழுள்ள மென்மையான தோலை/ மேல்
என்னும் காரணப் பெயர்ச்சொல்லால் கொங்கு மக்கள் ஆள்கின்றனர். சான்று:
”குளுரா இருக்குது; மேலுக்கு மட்டு
தண்ணி ஊத்திக்கொ”
இத்தகைய சொல்லாக்கங்கள் மக்களின் அறிவாண்மையையும்
படைப்பாற்றலையும் வெளிப்படுத்துகின்றன. இவற்றை அறிந்து தெளிதல் நன்று.
*******
Comments
Post a Comment