புறநானூறு மூன்றாம் பாவில் உன்னமும் முன்னமும்- மூலபாடக் கருத்தாய்வு
புதுச்சேரி
குழந்தைசாமி, பஞ்சலிங்கபுரம்
எட்டுத்தொகைப்
புறநூலான புறநானூற்றின் மூன்றாம் பா 26 அடிகளில் இயல்கின்ற நெடும்பாவாக அமைகின்றது. இது பாடாண்திணை; செவியறிவுறூஉ
/ வாழ்த்தியல் துறையது. பாண்டியன் வழுதியை
இரும்பிடர்த் தலையார் பாடிய இது. வேந்தனுக்கு
அறிவுறுத்தவும் அவனைப் போற்றவும் செய்யும் அடிக்கருத்தினது. இப் பாடல் சொற்பொருள் ஆய்வுக்கு
வாய்ப்பாகின்றது, சான்றாக,
உன்ன
மரத்த துன்னருங் கவலை (அடி 23)
முன்ன முகத்தின் உணர்ந்து .... ( அடி
25 )
என்னும் அடிகளைக் கருதலாம்.
உன்ன
மரம் நன்னிமித்தம் குறிப்பதாக, அதாவது ஆணிவேர் இல்லாத அடர்ந்து பரவுகின்ற இம் மரம்
மலர்ச்சியாக இருந்தால் வெற்றியும் நன்மையும் வாய்க்கும்; வாடினால் தோல்வி ஏற்படும்
என்று நம்பினர்.
அடுத்து,
முன்னம் என்னும் உளவியல்/ உடல் மொழிக் கலைச்சொல், முகக் குறிப்பைச் சுட்டுவதாகும்.
உன்ன மரம் அடர்ந்த கடுவழியைக் கடந்து நின்னிடம் வருகின்ற இரவலரின் முகக் குறிப்பை அறிந்து
ஈக! என்று பாவலர் வலியுறுத்துகின்றார்.
இப் பாடலில் உன்னம்/ முன்னம் ஆகியவற்றை ஒப்பொலிப்
பாங்கில் பாவலர் ஆண்டு முருகியலை விளைவித்துள்ளார்.
அரிதின்
உரை வரைந்து புறநானூற்றைப் பதிப்பித்த உ.வே.
சாமிநாதயைர், நூலின் இறுதியில் அரும்பத அகராதியைத் தொகுத்தளிதுள்ளார். இதில் 733ஆம் பக்கத்தில் உன்ன மரம் என்பதைக் குறிப்பிட்டு,
792ஆம் பக்கத்தில் இப் பதிவை முன்ன மரம் என்று பொருத்தமின்றிக் குறித்துள்ளார். திருத்திப்
பயன்கொள்ளலாம்.
நன்றி
: இணையத் தரவுகள் ********
Comments
Post a Comment