இதை – சங்கச் சொற்பொருண்மை

புதுச்சேரி குழந்தைசாமி, பஞ்சலிங்கபுரம்

                இலக்கியங்களில் பல துறைச் செய்திகள் புதைந்திருப்பதால் இவற்றின் ஆய்வுக் களங்களும் விரிந்து பரந்து பொருண்மையியல் / அகராதிச் சொல் அறிதல் வாய்ப்புகளும் உள்ளன. அவ் வகையில் இதை என்னும் ஒன்றன்பால் பெயர்ச்சொல்லை அணுகலாம். இது+ ஐ > இதை, இதனை என்றாகின்றது. ஆனால் , சங்க இலக்கியங்களான மதுரைக்காஞ்சி, பரிபாடல், அகநானூறு ஆகியவற்றில் மரக்கலப் பாய், கொல்லை என்னும் கருத்தில் தனிப் பெயர்ச்சொல்லாக இச் சொல் இயல்வதை இக் குறிப்புரை விளக்குகின்றது. சான்று:

                நெடுங்கொடி மிசை இதை எடுத்து ( மதுரைக்காஞ்சி, அடி 79 )

என்னும் அடியில் மரக்கலப் பாய் என்னும் கருத்தில் இயல்கின்றது. இவ்வாறே மதுரைக்காஞ்சி 376, 536 ஆகிய அடிகளிலும், பரிபாடல் 10ஆம் பாடலின் 53ஆம் அடியிலும் இந்தக் கருத்தில் பயில்கின்றது. இதனால் அக் காலத்தில் கடல்/ நீர்ப் போக்குவரத்துக்கு மரக்கலத்தில் பாயைக்  கட்டிக் காற்றின் இயக்க ஆற்றலைப் பயன்படுத்தியதைத் தெளியலாம்.

அடுத்து, அகநானூற்றில் பா140/11,133/7, 394/3 ஆகிய அடிகளில்  கொல்லை [விளைநிலம்} என்னும் கருத்தில் ஆளப்பட்டுள்ளது. சான்று:

      இதை முயல் புனவன் புகை நிழல் கடுக்கும் அகநா. 140/11.

இங்ஙனம் சங்கச் சொல் வளத்தைத் தெளிந்து, பாவின் கருத்தை உணரலாம். மேலும் அகராதி ஆக்கத்திற்கும் வாய்ப்பாகின்ரது.

நன்றி: இணையத் தரவுகள்              *********

 

 

 

                

Comments

Popular posts from this blog

தற்காலப் பொருண்மையியல் ஆய்வுக்குத் தொல்காப்பியத்தின் கருத்தளிப்பு