புறநானூற்றில் ஈகை – ஒப்புருப் பொருண்மை
புதுச்சேரி குழந்தைசாமி, பஞ்சலிங்கபுரம்
மொழியை வாய்ப்பாக்கிப் படைக்கப்படுகின்ற இலக்கியங்கள்
மொழி / பொருண்மை ஆய்விற்குக் களமாகின்றன. அம் முறையில் புறநானூற்றில் ஈகை என்னும்
பெயர்ச்சொல் மாறுபட்ட இரு பொருளில் ஒப்புருச்
சொல்லாக இயல்வதை விளக்குவதாக இக் குறிப்புரை இயல்கின்றது. இதற்காகக் கீழ்வருகின்ற புறநானூற்று அடிகளைச் சூழல் நோக்கி அணுகலாம்.
தண்டா ஈகைத் தகைமாண் குடுமி ( பா 06 அடி
26 )
ஈகைக் கண்ணி இலங்கத் தைஇ ( பா.353 அடி03)
இவற்றுள்,
ஆறாம் பாவில் பாடப்படுகின்ற பொருட்சூழலைக் கருத, ஈகை= கொடை ஆகின்றது.
அடுத்து,
353ஆம் பாடலின் பொருட்சூழலை உன்ன, ஈகை = பொன் என்று உலோகத்தைக் குறிக்கின்றது. இதே
பாடலின் இரண்டாம் அடியில் பொன் என்னும் சொல் பொலம் என்று திரிந்து பயில்வதும் நோக்கத்தக்கது.
இங்ஙனம் தங்கத்தைச் சுட்ட ஈகை, பொன் ஆகிய இரண்டு ஒருபொருட்பன்மொழிகளைக் காரிக்கண்ணனார்
ஆண்டிருப்பது முருகியல் பயப்பதோடு, சொல் வளத்தையும் வெளிப்படுத்துகின்றது.
மேலும்
ஈகை என்னும் பெயர்ச்சொல் கொடை என்னும் பொதுப் பொருளையும் பொன் என்னும் சிறப்புப் பொருளையும்
குறித்து, ஒப்புருச் சொல்லாக இயல்வது அறியத்தக்கது. இலக்கியத்தில் பயில்கின்ற ஒவ்வொரு
சொல்லையும் சுழல் நோக்கிக் கருத்துணர்ந்தால் விளம்பு பொருளைத் தெளிவாக உணரலாம்.
நன்றி : இணையத் தரவுகள் ****
Comments
Post a Comment