மன்னையும் கையறு நிலையும் ஒப்பாரியும்
புதுச்சேரி
குழந்தைசாமி, பஞ்சலிங்கபுரம்
உயிருள்ள எதுவும் இறப்புக்கும்
வளர்ச்சிக்கும் இறப்புக்கும் உட்பட்டவை. அதனால் மனித
வாழ்க்கை மரணத்தில் முடிவது இயல்பு. இருந்தாலும் சாவை யாரும்
விரும்புவதில்லை என்பதோடு உற்றார், தலைவர் போன்றோர் காலமாகும்போது
இரங்கி ஏங்கி அழுவது உண்டு. இன்றைய நிலையில் இறந்தவர் பிணத்தின்
அருகில் உறவு சுட்டியும் பெருமை கூறியும் ஒப்பாரி பாடி மகளிர் புலம்புவர்: பாவலர் இரங்கற்பா இயற்றுவர். நாடகம், திரைப்படம் போன்ற நிகழ்த்து கலைகளிலும் இவ்வாறான காட்சிகளும் பாக்களும் இடம்பெற்றுப்
பார்வையாளர்களை நெகிழ்விக்கின்றன. இது தன்னுணர்ச்சி வெளிப்பாடாக
இயலும்.
இந்த மரபு உலக இலக்கியங்களில்
தொல்பழங் காலத்திலிருந்து தொடர்கின்றது. ஆங்கிலத்தில்
‘ எலிஜி’ , வடமொழியில் ‘ சோக் கீத்’ என்றவாறு இது அழைக்கப்படுகின்றது.
தொல்காப்பியத்தில் காஞ்சித்
திணையில்
(நூற்பா 1025 ) மன்னை, கையறு
நிலை என்னும் இரண்டு துறைகள் இறந்தார்க்கு இரங்குகின்ற உளவியலை வெளிப்படுத்துவனவாக
இயல்கின்றன. இவற்றுள் மன்னைக் காஞ்சியை,
இன்னன் என்று இரங்கிய மன்னை
என்று, வீர மரணத்தைத்
தழுவியவரின் அருமை பெருமை சான்ற இயல்பினைக் கூறி இரங்குவது என்றும்,. கையறு நிலையை,
புலம்பிய கையறு நிலை
என்று , ஆழ்ந்த
இரங்கலால் இறந்தவனால் கிடைத்த அன்பும் ஆதரவும் இனிக் கிடைக்காதே என்று ஓங்கிப் புலம்புவது
கையறு நிலையாகும் என்றும் இலக்கணப்படுத்தியுள்ளார். இதை எடுத்துக்காட்டுப்
பாக்களாலும் அறியலாம்.
ஆகவே இறந்தார்க்கு இரங்கிப் பெருமை போற்றுவதை மன்னைத் துறையும், இறந்தவரால் பெற்ற கொடை இனிக் கிட்டாதே என்று புலம்புவதைக் கையறுநிலையும் சுட்டுகின்றன.
இவற்றின் நாட்டார் வடிவமாக ஒப்பாரி இயல்கின்றது
இங்ஙனம் தொல்காப்பியத்திலுள்ள
ஒவ்வொரு கலைச்சொல்லையும் ஒப்புநோக்கிக் கருத்தறியின் இலக்கணக் கொள்கை தெளிவாகும்.
மரபின் தொடர்ச்சி புலனாகும்.
நன்றி
: இணையத் தரவுகள். *******
Comments
Post a Comment