வள்ளுவத்தில்  ‘அமை’ - கருத்தாய்வு           

புதுவை குழந்தைசாமி, பஞ்சலிங்கபுரம்

           திருக்குறளின் சொல்லாட்சி நுட்பமானது. பழந்தமிழ்ச் சொற்களோடு, தான் அறிவுறுத்தவந்த அறவுரைக்கேற்ப அறவியல் கலைச்சொற்களையும் வள்ளுவம் ஆண்டுள்ளது. அதனால் ஒவ்வொரு சொல்லையும் சூழல் நோக்கிக் கருத்துணரவேண்டும். அப்போது தெளிவு வாய்க்கும். அந் நிலையில்,

             இமையாரின் வாழினும் பாடிலரே; இல்லாள்
            அமையார்தோள் அஞ்சு பவர் (906)

என்னும் குறட்பாவில் பயில்கின்ற அமை என்னும் ஒன்றன்பால் பெயர்ச்சொல்லின் கருத்து அறியத்தக்கதாகும். அமை + ஆர்+ தோள் என்னும் செய்யுள் தொடர்க் கட்டமைப்பில் பசிய வளவளப்பான இளம் மூங்கில் என்னும் கருத்தில்  அமை என்னும் சொல் ஆளப்பட்டுள்ளது. இது பெண்ணின் கைக்கு உவமையாகக் கூறப்படுகின்றது. 635ஆம் குறட்பாவில்  அமைந்த என்று வினையாகவும் அமை இயல்வது ஒப்பத்தக்கது. இவ்வாறு குறட்பாக்களின் உறுப்புச் சொற்களை இலக்கண வகைமை நோக்கிச் சூழலுக்கேற்பக் கருத்துணர்ந்தால் வள்ளுவ விழுமியங்கள் தெளிவாகி, மானுடம் வெல்லும்.

  நன்றி: இணையத் தரவுகள்                                  **************

Comments

Popular posts from this blog

தற்காலப் பொருண்மையியல் ஆய்வுக்குத் தொல்காப்பியத்தின் கருத்தளிப்பு