சாக்குத்தி வள்ளுவ அரசியல்  பொருண்மை

முனைவர்ப. கொழந்தசாமி, அரசினர் ஆய்வு நிறுவனம், புதுச்சேரி

            உயர்தனிச் செம்மொழியான தமிழில், சொல் திரிபால் பொருள் குழப்பம் ஏற்படுவதுண்டு. இந் நிலை பிற மொழிகளிலும் இயல்கின்றது. அம்முறையில், சாக்குத்தி போன்ற தொடர்கள் அடைந்த திரிபைத் தெளிந்து உரிய கருத்தை உணரலாம்.

               சாவ என்னும் செயஎன் எச்சத்து

                               இறுதி வகரம் கெடுதலும் உரித்தே

                                                           ( தொல்காப்பியம், உயிர்மயங்கியல், நூ 07 )

என்னும் நூற்பா விதிப்படி,

                                சாவ+ குத்தி

என்னும் உயிரீற்றுப் புணர்ச்சியில், சாவ என்னும் தெரிநிலை எதிர்கால வினையெச்சத்தின் இறுதி வகரம் கெட, சாக்குத்தி என்னும் புணர்ச்சி நிகழ்கின்றது; ஆயினும் பொருள் மாற்றம் நேராது. முல்லைக்கலியின் 05ஆம் பாவின் 35ஆம் அடியில்   'கோட்டின்வாய்ச் சாக்குத்தி' என்னும் பகுதியிலும் சாவக் குத்தி என்பதன் புணர்ச்சித் திரிநிலை காணப்படுகின்றது. இம் மரபில் வள்ளுவம் ஓர் அரசியல் உறவைப் பரிந்துரைக்கும்போது,

                மிகச்செய்து தம்மெள்ளு வாரை நகச்செய்து
                நட்பினுள் சாப்புல்லற் பாற்று (829 )

என்னும் கூடா நட்பு அதிகாரக் குறட்பாவில், புறத்தில் உன்னோடு நட்பாடி, உள்ளத்தில் உன்னை எள்ளுவாரை , நீயும் அவ்வாறே செய்க என்று அறமுரைக்கும்போது, சாவ என்னும் தெரிநிலை எதிர்கால வினையெச்சத்தின் இறுதி வகரம் கெட, சா என்று திரித்துப் புணர்த்துள்ளார். இது ஓர் அரசியல் அறத்தைக் கூறுகின்றது. இத்தகைய புணர்ச்சித் திரிபைத் தெளிந்தால், விளம்பப்படுகின்ற அறநெறி புலனாகும். இயல்பு புணர்ச்சியன்றி, இவ்வாறான திரிபுப் புணர்ச்சி தொடர்களில் இயல்வதையும் கருதவேண்டும்; அவ்வாறே ஒரு தொடரின் புறநிலை & புதைநிலை வடிவங்களையும் உன்னலாம்.

                                                                         *******

பயன்பட்டவை

               (http://tamilconcordance.in) &  தமிழிணையக்கல்விக்கழகத் தரவுகள்.

            

Comments

Popular posts from this blog

தற்காலப் பொருண்மையியல் ஆய்வுக்குத் தொல்காப்பியத்தின் கருத்தளிப்பு