தொல்காப்பியத்திலும் வள்ளுவத்திலும் ‘தொல்’; சொற்பொருண்மை ஒப்பீடு
முனைவர் ப. கொழந்தசாமி, அரசினர் ஆய்வு நிறுவனம், புதுச்சேரி.
செய்யுளும்
வழக்கும் என்னும் இரண்டு வகைத் தமிழ்ப் பயன்பாட்டோடு, முந்து நூல் கண்டு
முறைப்படி ஆய்ந்து ஆக்கப்பட்ட, விளக்கவியல் இலக்கணமான தொல்காப்பியத்தை
வள்ளுவர் பொன்னேபோற் போற்றி அனைத்து நிலைகளிலும் எடுத்தாண்டுள்ளார். இது தொல்காப்பியத்தின் சீர்மிகு தாக்கமாகும். அம் முறையில் தொல் என்னும் பண்பாட்டு
மானுடவியல் கலைச்சொல் ஒப்பிடத்தக்கது. எழுத்து, சொல், பொருள் என்னும் மூன்று அதிகாரங்களிலும்
, பின்வருகின்ற நூற்பாக்களில் தொல் எனும்
சொல் பழமை/முன் என்னும் பொருளில்
பயில்கின்றது:
|
அதிகாரம் |
இயல் |
இயல்
நூற்பா எண் |
|
எழுத்து |
புள்ளி
மயங்கியல் |
60 |
|
எழுத்து |
குற்றியலுகரப்
புணரியல் |
04 |
|
சொல் |
வேற்றுமை
மயங்கியல் |
18 |
|
சொல் |
வேற்றுமை
மயங்கியல் |
27 |
|
சொல் |
எச்சவியல் |
53 |
|
பொருள் |
புறத்திணையியல் |
12 |
|
பொருள் |
புறத்திணையியல் |
21 |
|
பொருள் |
களவியல் |
22 |
|
பொருள் |
கற்பியல் |
05 |
|
பொருள் |
கற்பியல் |
06 |
|
பொருள் |
கற்பியல் |
27 |
|
பொருள் |
கற்பியல் |
31 |
|
பொருள் |
பொருளியல் |
31 |
|
பொருள் |
செய்யுளியல் |
52 |
|
பொருள் |
செய்யுளியல் |
190 |
|
பொருள் |
செய்யுளியல் |
238 |
திருக்குறளில் 762, 806, 1043, 1234,1235 ஆகிய குறட்பாக்களில் தொல் எனும் சொல் பழமை/முன் என்னும் பொருளில் பயில்கின்றது; சான்றாக,
உலைவிடத்து
ஊறஞ்சா வன்கண் தொலைவிடத்துத்
தொல்படைக் கல்லால் அரிது
(762)
என்னும்
குறளைக் கருதலாம். நீண்ட அனுபவமும், தொடர்ந்த பயிற்சியும் உள்ள மூலப்படையினர்
தோல்வியைக் கண்டு அஞ்சிப் பின்வாங்கமாட்டார் என்னும் கருத்து இக் குறட்பாவில் அமைகின்றது,
இவ்வாறே மற்ற குறட்பாக்களும்.
மரபையும் தொன்மையையும் போற்றுகின்ற
தமிழ்ச் சமுதாயத்தில் இத்தகைய சொல் தொடர்ந்து இயல்வது இயல்பே; இன்றைய வழக்கிலும் இதே பொருளது. இவ்வாறாக, பண்பாட்டு
மானுடவியல் கலைச்சொல்லான தொல்லைத் தொல்காப்பியத்தை
அடியொற்றி வள்ளுவமும் ஒத்த பொருளில் ஆண்டுள்ளது. இது ஒருமொழி
ஒப்பீட்டிற்கும், மொழி வரலாற்றுக்கும், சொற்பொருண்மை ஆய்வுக்கும் அடித்தளமாகின்றது.
பயன்பட்டவை
தமிழிணையக் கழக நூலகத் தரவுகள்.
Comments
Post a Comment