கொங்கு வழக்காற்றில் தொறப்பு / மாட்டு

முனைவர் ப. கொழந்தசாமி, அரசினர் ஆய்வு நிறுவனம், புதுச்சேரி.

தமிழ் வட்டார வழக்குகள் நிறைந்தது. அவற்றுள் கொங்கு வட்டார வழக்கும் ஒன்று. கோவை, நீலகிரி, ஈரோடு, திருப்பூர், சேலம், தருமபுரி, மதுரை மாவட்டங்களை உள்ளடக்கிய பகுதி கொங்கு மண்டலம் ஆகின்றது. இங்கு நீங்க வாங்க என்றவாறு மரியாதை அதிகம்.  இங்கு, கதவிலிடுகின்ற பூட்டை, தொறப்பு ( திறப்பு >  தொறப்பு, அதாவது இ> ஒ ) என்றும்,  பூட்டின் திறவுகோலை.  தொறப்புக் குச்சி எனவும்வழங்குகின்றனர்;

          சான்று:    அம்மிணி ! தொறப்புக் குச்சியெ எங்க வெச்சே?

அடுத்து,  பேச்சு வழக்கில் மாட்டு என்னும் சொல்லை,

1. வினையாக, திட்டு என்னும் பொருளில் ‘ அவெ கோவப்பட்டு மாட்றே’

2.  வினையாக, தொங்கவிடு என்னும் பொருளில்

                                               ‘ சட்டையெ ஆணீலெ மாட்டு’

3. பெயரடையாக, ’மாட்டுப் பால்’, ‘ மாட்டுப் பொங்கல்’

என்று பலபொருட்சொல்லாக ஆள்கின்றனர். தமிழின் சொல்லாக்க / சொல் வளத்தை/ ஒலி  மாற்ற மரபை  அறிய இத்தகைய வட்டார வழக்குச் சொற்கள் வாய்ப்பாவதோடு, பொதுமக்களின் மொழித்திறனும் புலானாகும்.

                                   ---------

Comments

Popular posts from this blog

தற்காலப் பொருண்மையியல் ஆய்வுக்குத் தொல்காப்பியத்தின் கருத்தளிப்பு

தமிழியலாய்வு