தொல்காப்பியத்தில்காட்சியின் பொருட்பன்மை

பேரா. குழந்தைசாமி, புதுச்சேரி

 உயர்தனிச் செம்மொழியான தமிழ் வரையறுக்கப்பட்ட இலக்கணக் கட்டமைப்பைக் கொண்டதாகும். அதனால் இலக்கணவியல், இலக்கியவியல் கொள்கைகளை இலக்கணவாணர்கள் உருவாக்குகின்றனர். அதன்படி, ஒரு பனுவலில் பயில்கின்ற சொற்களின் சூழற்பொருளை அறிந்து கருத்துணர்தல் அடிப்படையானதாகும். இக் குறிப்புரை காட்சி என்னும் தொழிற்பெயர் தொல்காப்பியத்தில் ஒப்புருச் சொல்லாக, மாறுபட்ட பொருளில் இயலுமாற்றை விளக்குகின்றதுதொல்காப்பியர் வகுத்தளித்துள்ள இலக்கணக் கொள்கைகளோடு அவரது நடையும் சொல்லாட்சியும் தமிழின் இயங்கியலைத் தெளிய வாய்ப்பாகின்றன.

காட்சி:

            காண்+ சி > காட்சி. காண் என்னும் வினைப் பகுதியுடன் சி என்னும் தொழிற்பெயர் விகுதியை ஒட்டி, காட்சி என்னும் தொழிற்பெயர் ஆக்கப்படுகின்றதுபரவலாக பார்த்தல் என்னும் கருத்தில் இது வழங்கப்படுகின்றதுதொல்காப்பியத்தில் இச் சொல்

நூற்பா எண்

சொல்லாட்சி

கருத்து

1006

காட்சி கால்கோள்

கல் தேர்ந்தெடுத்தல்

1037

ஆற்றிடைக் காட்சி

எதிரில் வருவாரைக் காணல்

962 , 1053

காட்சி

ஒருவரைப் பார்த்தல்

1059

செயிர்தீர் காட்சி

பொறுப்புணர்வு

1610

ஒத்த காட்சி

 பெயர்

83 , 101

தெரிந்த காட்சி

 ஆராய்ச்சி

 

என்றவாறு தேர்தல், காணல். பொறுப்புணர்வு, பெயர், ஆராய்ச்சி என்று மாறுபட்ட கருத்தில் பயில்கின்றது. இத்தகைய ஒப்புருச் சொற்களுக்குச் சூழலறிந்து கருத்துணர்ந்தால் பனுவல் பகர்கின்ற இலக்கணக் கொள்கையைத் தெளியலாம்.

நன்றி:   தமிழண்ணல்(உரை.),2008, தொல்காப்பியம், மதுரை மீனாட்சி புத்தக நிலையம்.

. ஜெயதேவன் ( பதிப்.) 2004, தொல்காப்பிய அகராதி, சென்னைப் பலகலைக்கழகம்.

                                                              -----------

Comments

Popular posts from this blog

தற்காலப் பொருண்மையியல் ஆய்வுக்குத் தொல்காப்பியத்தின் கருத்தளிப்பு