பொதுமறையில் ‘புலம்’ – கருத்தாய்வு
பேரா. குழந்தைசாமி,
புதுச்சேரி
உயர்தனிச்
செம்மொழியாம் தமிழ், பொருண்மை வளம் மிக்க வளர் மொழியாகும். இதனால் இலக்கியத்தில் ஒரு சொல் பொருட்பன்மையுடன்
வழங்குவதால், சூழலுக்கேற்ற கருத்தை அறிவது தேவையாகின்றது.
இம் முறையில் திருக்குறளில் புலம் என்னும் ஒன்றன்பால் பெயர்ச்சொல்
வேறுபட்ட பொருளில், ஒப்புருச் சொல்லாகப் பயில்வதை எடுத்துரைப்பதாக
இக் குறிப்புரை இயல்கின்றது.
புலம்= சொற்பொருள்:
வயல், இடம், திசை, பொறி, புலனுணர்வு, அறிவு, நூல் ஆகிய பொருளில்
புலம் என்னும் பெயர்ச்சொல் வழங்குவதாக, செந்தமிழ்ச் சொற்பிறப்பியல்
பேரகரமுதலி (ஆறாம் மடலம் ; இரண்டாம் படலம்,
பக்.361- 362 ) சுட்டுகின்றது. நிலம், கல்வி/தொழில் பிரிவு, நுணுகி ஆயும் அறிவு என்று விக்சனரி குறிப்பிடுகின்றது. இவற்றால் இதன் பொருட்பன்மை
தெளியலாகின்றது. செம்புலப் பெயல்நீர் ( குறுந்தொகை, பா 40 ) போன்ற
இலக்கிய வழக்குகளும், புலம் தொகுத்தோன் ( தொல்காப்பிய பனம்பாரர் பாயிரம்), புலம் பெயர்ந்தோர் போன்ற வழக்காறுகளும்
இவண் நோக்கத்தக்கன.
பொதுமறையில்
‘புலம்’:
பழந்தமிழ்ச் சொல்லான புலம் திருக்குறளில்,
85 – விளைநிலம் ; 174, 343- ஐம்பொறிகள்;
1301- நேரம் – காலம்; 407, 716 –அறிவு / திறன்
ஆகிய சூழல்களில்,
விளைநிலம், ஐம்பொறி, காலம், அறிவு என்னும் கருத்துகளில் இயல்வதைத் தெளிந்து விளம்பு
பொருளை அறியலாம்.
நன்றி
: (https://ta.wiktionary.org/wiki/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D)
--------
Comments
Post a Comment