சிறுமுதுக்குறைவி – சிறுமியின் ஆளுமைப் பெருமை

புதுவை குழந்தைசாமி, பஞ்சலிங்கபுரம்

இலக்கியங்கள் சமூக மானுடவியல் கொள்கைகளை ஆங்காங்கே  பதிவுசெய்கின்றன.  இவற்றை உண்மையெனப் போற்ற இயலாவிடினும், இத்தகைய எண்ண ஓட்டம்  நிலவியது என்பதை உணரலாம். இந் நிலையில் மகளிர் நிலை பற்றித் தொன்மைக் காலம் முதல் இன்று வரை இலக்கியங்கள் எடுத்துரைக்கின்றன. அவற்றுள் சங்கப் பாக்கள் பெண்மையின் மாண்பைப் பல பாடல்களில் படம்பிடித்துக்காட்டுகின்றன.

அகநானூற்றின் 17ஆம் கயமனார் பாடலில்,  மகட்போக்கிய செவிலித்தாய்  தலைவனுடன் உடன்போன  வளரிளமைப் பருவ மகளை ” சிறுமுதுக்குறைவி “ ( அடி 09 ) அதாவது இளைமையிலேயே அறிவு சான்றவள்/ திறன் மிக்கவள் என்று பாராட்டுகின்றாள். ஒரு சமூகத்தில் இத்தகைய மேன்மை நிலவினால், அது செம்மாந்ததாக மதிக்கப்படும். தமிழகத்தில் இவ்வாறான திறன்மை இருந்தது; அதை மென்மேலும் வளர்ப்பதாகக் குடும்பச் சீர்மையும் அறிவாக்க / திறன் மேம்பாட்டு முயற்சிகளும் அமையலாம்.  பாலினச் சமன்மையும் மகளிர் மேம்பாடும் ஒட்டுமொத்த உயர் வளர்ச்சிக்கு வாய்ப்பாகும்.

நன்றி : இணையத் தரவுகள்           ********

 

 

Comments

Popular posts from this blog

தற்காலப் பொருண்மையியல் ஆய்வுக்குத் தொல்காப்பியத்தின் கருத்தளிப்பு