ஆய்ந்தவர் – சூழல் பொருண்மை
புதுவை
குழந்தைசாமி, பஞ்லிங்கபுரம்
திருக்குறளின்
சிறப்புகளுள் அதன் நடைச் சீர்மையும் ஒன்றாகும். மரபைப் போற்றியதோடு புத்தாக்க முயற்சியிலும் வள்ளுவர்
ஈடுபட்டார்.
ஊறொரால் உற்றபின் ஒல்காமை இவ்விரண்டின்
ஆறென்பர் ஆய்ந்தவர் கோள் ( 662 )
என்னும் குறட்பாவில் , எதிரது காத்துத் திட்டமிடலும் தொய்வேற்படின் மனந்தளராமையும் ஆட்சியாளருக்குத் தேவை என்பதை வலியுறுத்துகின்றார்.
இக் குறட்பா கருத்து வேற்றுமைக்கு வாய்ப்பளிப்பதால் மாறுபட்ட உரை விளக்கங்கள்
எழுந்துவருகின்றன. இதனால் இதைப் படிப்பார்க்குத் தெளிவின்மை தோன்றலாம்.
அதைத் தெளிவிக்கச் சூழல் பொருண்மை அணுகுமுறை, [அதாவது ஒரு சொல்லை மொழிச் சூழல், கருத்துப் புலம், ஒத்த கருத்துகளை
ஒப்பிடல்] வாய்ப்பாவதால் , தெளிவிப்பு முயற்சி இவண் மேற்கொள்ளப்படுகின்றது.
ஆய்ந்தவர் என்னும் சொல்லின் கருத்தைப் புரிந்துகொண்டால் குறட்பாவின் பொருளைத் தெளியலாம். இக் குறட்பா மனவுறுதியை வலியுறுத்துகின்றது.
மனமாட்சி கொண்டோர் எதற்கும் தளரார்; எதையும் முறியடிப்பர். இது மனிதவள / ஆட்சியல் நூறிவும் செயலறிவும் நிறைந்தோர் கொள்கையாகும் என்பது இக்
குறட்பாவின் விழுமியம் ஆகும். இதனால் ஆய்ந்தவர் என்னும் சொல் மனிதவள வல்லுனரைக் குறிப்பதாகக் கொள்ளலாம்.
இவ்வாறு இன்றைய அறிவு வளர்ச்சியின் நோக்கில் குறட்பாக்களை அணுகினால் தெளிவு வாய்ப்பாகும்;
வள்ளுவத்தின் சீர்மையும் அறியப்படும்.
நன்றி
: இணையத் தரவுகள்
******
Comments
Post a Comment