321ஆம் குறட்பாத் தொடரிணைப்பான்
புதுவை
குழந்தைசாமி, பஞ்சலிங்கபுரம்
திருக்குறள்
மொழித் தொழில்நுட்பத்தைச் செவ்வனே கையாண்டு படைக்கப்பட்டுள்ளதால், ஒவ்வொரு குறட்பாவையும்
பொறுமையாகப் படித்துச் சிந்தித்தால் முழுக் கருத்தையும் தெளியலாம். அம் முறையில் குறட்பாக்களின்
தொடரமைப்பும் தெளியத்தக்கதாகும். சான்றாக 321ஆம் குறட்பாவை அணுகலாம்.
அறவினை யாதெனின் கொல்லாமை ; கோறல்
பிறவினை எல்லாந் தரும் (321)
என்னும் கொல்லாமை அதிகாரக் குறள், எதையும் அழிக்காமையை / கொல்லாமையை வலியுறுத்துகின்றது.
இது அழித்தலான பிறழ் மனநிலையைக் கண்டிக்கின்ற உயிரிரக்க விழுமியமாகும். இது மொழிந்ததைத்
தெளிவித்து விளக்குவதாகும். இக் குறட்பாவை ஆல் சேர்த்து ஒரு தொடராக,
கொல்லல் / அழித்தல், பல தீங்குகளையும் விளைவிப்பதால் ,
கொல்லாமை அற வினைகளுள் சிறந்ததாகும்
என்றவாறும் உரைநடைப்படுத்தலாம். அல்லது குறளின்
நடைப்படி ,
கொல்லாமை அற வினைகளுள் சிறந்ததாகும்
.
ஏனென்றால் / எப்படியென்றால் அது பல தீங்குகளையும் விளைவிக்கும்.
என்றும் இரண்டு தொடர்களாக அமைக்கலாம். அப்போது
ஏனென்றால் / எப்படியென்றால் என்னும் தொடரிணைப்பான் [ conjunction] அமையும். இங்ஙனம் இரண்டு
தொடர்களைக் கொண்ட குறட்பாக்களில், பொருத்தமான தொடரிணைப்பானை அமைத்துக்கொண்டால் தெளிவு வாய்க்கும்.
நன்றி
: இணையத் தரவுகள். ********
Comments
Post a Comment