திருக்குறளில் ’ஒன்று ’- பொருட்பன்மை
புதுவை
குழந்தைசாமி, பஞ்சலிங்கபுரம்
இலக்கியங்கள் மொழியை மூலப்பொருளாகக் கொண்டு
கருத்தையும் உணர்ச்சியையும் வெளிப்படுத்துகின்றன. படைப்பாளர் தன் நோக்கத்திற்கும் மொழித்திறனுக்கும்
ஏற்ப மொழித்தொழில்நுட்பத்தைக் கையாளுகின்றார். அப்போது மொழியால் படைப்பும் , படைப்பால்
மொழியும் செறிவுறுகின்றன. இம் முறையில் திருக்குறளிலும் மொழிப் பயன்பாடும் சொல்லாட்சியும்
அறிவுக்கு விருந்தாகி ஆய்வுக்கு வாய்ப்பாகின்றன. இக் குறிப்புரையில் ஒன்று என்னும்
சொல் பெயராகவும் வினையாகவும் வள்ளுவத்தில் பயில்வது விளக்கப்படுகின்றது.
ஓர் இலக்கியத்தைக் கற்கும்போது அதில்
பயில்கின்ற ஒவ்வொரு கூறிலும் செறிக்கப்பட்டுள்ள பொருண்மையை/ உணர்ச்சியைத் தெளியவேண்டும். அதற்குச் சொல்லியல், தொடரியல் பொருண்மையியல் அறிவு
வாய்ப்பாகும். சான்றாக, ஒன்று என்னும் சொல் திருக்குறளில் ஆளப்பட்டுள்ளதைக் கருதலாம்.
வறியார்க்கு ஒன்று ஈவதே ஈகை மற்றெல்லாம்
குறியெதிர்ப்பை
நீர துடைத்து ( 221 )
என்னும் குறட்பாவில்
ஒன்று என்பது எண்ணுப்பெயராக இயல்கின்றது. மாறாக,
ஒன்றாமை ஒன்றியார் கட்படின் எஞ்ஞான்றும்
பொன்றாமை
ஒன்றல் அரிது (886)
என்னும் குறட்பாவில்
ஒன்று என்பது பொருந்துதல் என்னும் கருத்தில் வினைப் பகுதியாக இயல்கின்றது.
மேலும் இக் கருத்தினதாக,
உலகத்தோடு
ஒட்ட ஒழுகல் பலகற்றும்
கல்லார் அறிவிலாதார் (140 )
என்னும் குறட்பாவில்
பயில்கின்ற ஒட்ட என்கின்ற சொல்லும் பொருந்த என்னும் கருத்தில் ஆளப்பட்டுள்ளமை ஒப்பத்தக்கது. இங்ஙனம் குறட்பாவிலுள்ள ஒவ்வொரு
சொல்லையும் கருத்துணர்ந்து கற்கின் புரிதிறன் நிறைவாகும்.
நன்றி; இணையத் தரவுகள் *******
Comments
Post a Comment