செய்யபொருட்பன்மை

புதுவை குழந்தைசாமி, பஞ்சலிங்கபுரம்

 

            இலக்கியங்களில் பயில்கின்ற சொற்கள், தமிழ்ப் பொருண்மை அமைப்பையும் அறிய வாய்ப்பாகின்றன. அவ்வாறே பொருண்மை நோக்கில் சூழலறிந்து சொல்லின் கருத்தறியவேண்டும். அவ் வகையில்  செய்ய என்னும் எச்சச்சொல் பெயரெச்சமாகவும் வினையெச்சமாகவும்  தொன்றுதொட்டு இயல்வதை விளக்குவதாக இக் குறிப்புரை அமைகின்றது.

                        செய்ய திருவடி = சிவந்த தாள்

  செய்ய சிந்தை = நேர் சிந்தனை

ஆகிய வாக்கியங்களில் பெயரின் பண்பைச் சுட்டுகின்ற பெயரெச்சமாக இச் சொல் இயல்கின்றது. இவண் ஒற்று மிகாது.

            செய்யச் சொன்னார் என்னும் தொடரில் வினையெச்சமாக அமைகின்றது. இங்கு ஒற்று மிகும்.

            இங்ஙனம் மொழிச் சூழல் நோக்கி இலக்கியச் சொற்களுக்குக் கருத்தறிதல் தேவை.

                                            ********

Comments

Popular posts from this blog

தற்காலப் பொருண்மையியல் ஆய்வுக்குத் தொல்காப்பியத்தின் கருத்தளிப்பு