பொருளியல்இலக்கிய நுகர் முறைமையைத் தெளிவிப்பது

புதுவை குழந்தைசாமி, பஞ்சலிங்கபுரம்

 

நுண்ணறிவால் இயற்றப்பட்ட தொல்காப்பியம் மூன்று அதிகாரங்களையும்  27 இயல்களையும் உள்ளடக்கியது.  ஒவ்வோர் இயலின் தலைப்பும் தன்விளக்கம் உடையதாகவும்  விளம்பு பொருளை அறிவிப்பதாகவும் இயல்கின்றது. உரையாசிரியர்கள் மற்ற இயல்களுக்குப் போலவே பொருளியலுக்கும் பெயர் விளக்கம் எழுதியுள்ளனர்.

53 நூற்பாக்களைக் கொண்ட, பொருளதிகாரத்தின் ஐந்தாம் இயலான இது, அதிகாரத் தலைப்பைப் பெற்றதாகும். ஆகவே அடக்குசொல்லான அதிகாரமும் அடங்குசொல்லான இயலும் ஒத்த நோக்கின; அதாவது இலக்கியப் பாடுபொருளை விளக்குவன. பொருளதிகாரம் ஒன்பது இயல்களில் இலக்கிய வகைமை, வடிவம், முருகியல், உணர்ச்சிகள், படைப்பாக்க நெறிமை, மரபுகள் ஆகியவற்றை விரிவாக எடுத்துரைக்க, பொருளியல் மற்ற எட்டு இயல்களிலும் கூறப்படாமல் விடுபட்ட செய்திகளையும் வழுவமைதியையும் ஒழிபியலாக அமைந்து விளக்குகின்றது. அதனால் இலக்கியப் பொருண்மை குறித்த ஒழிபுத் தகவல்களைக் கொண்ட, இலக்கிய நுகர் முறைமையைத் தெளிவிப்பதாக, இவ் இயலை, இலக்கியப் பொருண்மையியலின் நீட்சியாக / புறனடைப் பகுதியாகக் கொள்ளின் தெளிவு வசப்படும்.

  அதோடு தமிழ் இலக்கியப் பொருண்மையியலின் தொன்னூலாக அமைந்து, இத் துறைக்குத் தொல்காப்பியம் நல்குகின்ற பங்களிப்பு அறியப்படும். பொருலியலில் விளக்கப்படுகின்ற இலக்கியப் பொருள்நுகர் கொள்கைகள் உலகப்பாங்கின; ஒப்பிலக்கியத்தை வளர்ப்பன என்பது கூடுதல் சிறப்பாகும்.

நன்றி: இணையத் தரவுகள்                  ******

Comments

Popular posts from this blog

தற்காலப் பொருண்மையியல் ஆய்வுக்குத் தொல்காப்பியத்தின் கருத்தளிப்பு