வள்ளுவம் சுட்டும் கருவி – சிறப்புப் பொருண்மை
புதுவை
குழந்தைசாமி, பஞ்சலிங்கபுரம்
தொல் மரபைப் போற்றுகின்ற
வள்ளுவம் புதுமைக்கும் வாய்ப்பளித் துள்ளது. சான்றாக, கருவி என்னும் பெயர்ச் சொல் வள்ளுவத்தில் பயில்கின்ற
பாங்கைக் கூறலாம்.
தொல்காப்பிய உரியியலின்
57ஆம் நூற்பா, கருவி எனும் உரிச்சொல் தொகுதி என்று பொருள்படும் என்று குறிக்க,
சங்க இலக்கியத்தில் இவ் வழக்கைக் காணமுடிகின்றது. [ அகநானூறு பா 04;அடி06 ].
இன்றைய வழக்கிலும் இசைக்
கருவி, கைக் கருவி, துணைக் கருவி போன்ற
வழக்குகள் இயல்கின்றன. அதாவது ஒன்றைச் செய்வதற்குத் துணையாகின்ற
மண்வெட்டி, சுத்தி, கத்தி போல்வன;
கருத்தாடலில் மொழியையும் கருவியாகச்
சுட்டுகின்றனர்.
அறிவு அற்றங் காக்குங் கருவி;
செறுவார்க்கும்
உள்ளழிக்க லாகா அரண் (குறட்பா
421 )
என்று, வள்ளுவம்
மேற்கூறியவற்றோடு, அறிவை நிறைவாழ்விற்கு
வாய்ப்பாகின்ற கருவியாகக் காட்டுவது புதுமையும் சீர்மையும் ஆகும். தீமையை விலக்க, அழிவிலிருந்து காக்க அறிவு வாய்ப்பவதை
வள்ளுவம் விண்டுரைத்து, மண்ணில் நல்ல வண்ணம் வாழ வழிகாட்டுகின்றது.
நன்றி: இணையத்
தரவுகள்
*********
Comments
Post a Comment