பணியமர்த்து முறையை  வகுக்கின்ற 506ஆம் குறட்பாவின் தொடரமைப்பு

பேராசிரியர் குழந்தைசாமி, புதுச்சேரி

ஒரு குறட்பா ஒன்று அல்லது பல விழுமியங்களை வகுத்துரைக்கின்றது; அதற்கேற்ற  சொற்களால் அக் குறட்பாவின் தொடர் / தொடர்கள் கட்டமைக்கப்படுகின்றன. இத்தகைய தொடர்க் கட்டமைப்பு முறைமையைத் தொல்காப்பியம் முதலிய இலக்கண நூல்கள் வகுத்துரைத்துள்ளன. பொதுவாக, எழுவாய் + செயப்படுபொருள்+ வினைமுற்று என்னும் அமைப்பில் தொடர் அமையும். ஆனால் செய்யுள் கட்டுப்பாடுகளால் இத்தகைய தொடராக்கத்தில் திருவள்ளுவர் புதுமைகளைப் புகுத்தியுள்ளார். அதனால் குறட்பாத் தொடர்களைத் தொடர்ப் பொருண்மை அடிப்படையில் உரைநடைத் தொடரமைப்பில் தகவமைத்துக் கருத்தறியலாம். சான்றாக, அரசியலின் தெரிந்து தெளிதல் அதிகாரத்தில்,

அற்றாரைத் தேறுதல் ஓம்புக; மற்றுஅவர்
பற்றிலர் ; நாணார் பழி ( 506 )

என்னும் குறட்பாவில் கீழ்வருமாறு இணையான மூன்று அறவுரைகள் இயல்கின்றன.

Ø  பொறுப்பான வாழ்க்கை அமைப்பும் அறிமுகமும் இல்லாதவரைத் தலைமைப்            

                                         பொறுப்புக்கு அமர்த்தக்கூடாது,

 

v  ஏனெனில் அத்தகையவர் மக்கள் முன்னேற்றத்தில் அக்கறைகொள்ளார்.

ü  அதோடு பழிக்கு நாணாமல் விருப்பம் போல் செயல்படுவார்.

முதல் தொடரில் மேலாண்மை அறவியலை / ஆள் தேர்வு  நுட்பத்தை உரைத்துவிட்டு, அடுத்த இரண்டு தொடர்களிலும் அதற்கான காரணங்களை எடுத்துரைத்துள்ளார். இத்தகைய குறட்பாக்கள் மொழி ஆய்வுக்கு வாய்ப்பாவதோடு,  பழந்தமிழக ஆட்சி / மேலாண்மை நுட்பங்களையும் அறிய வாய்ப்பாகின்றன. இக் குறட்பாக் கருத்துகள் நிலைபேறுடையன / என்றைக்கும் / யாவருக்கும் பொருந்தக்கூடியவை. இக் குறட்பாவின்,

Beware of trusting men who have no kith of kin;
No bonds restrain such men, no shame deters from sin. ( G.U. Pope }

A person disregarding virtues and lacking the shame of flame, is not to be trusted upon

[posted for ]   -   (J. Narayanasamy)

என்னும் ஆங்கில மொழிபெயர்ப்புகளும் இவண் கருதத்தக்கன.

 

                       பயன்பட்டது

Narayanasamy, J.,( Translator ),2002, Thirukkural,  சென்னை; சுரா புக்ஸ்.

 

                                                                         ********

   

Comments

Popular posts from this blog

தற்காலப் பொருண்மையியல் ஆய்வுக்குத் தொல்காப்பியத்தின் கருத்தளிப்பு