180ஆம் குறட்பாவின் தொடர்ப் பொருண்மை
பேராசிரியர் குழந்தைசாமி, புதுச்சேரி
தொடரை மையமிட்டு இலக்கணம் இயம்புகின்ற தொல்காப்பியம் ஆங்காங்கே தமிழ்த் தொடரியல் கொள்கைகளை வகுத்துரைத்துள்ளது. இவற்றுள்
பொருள்கோள், யாப்பு, குறை போல்வன சிறப்பாகச்
செய்யுளுக்குரியவை. இதனடிப்படையில் இலக்கியத் தொடரமைப்பை
அணுகினால் மயக்கம் ஏற்படாமல் புரிதிறன் சிறக்கும். அதோடு பல
கட்டுப்பாடுகளால் பொது அமைப்பிலிருந்து செய்யுளின் தொடரமைப்பு வேறுபடுகின்றது.
இதை நோக்கிப் பாத் தொடரை முறையாக அறிந்துகொள்ளவேண்டும். அம் முறையில் 180ஆம் திருக்குறளின் தொடரமைப்பை விளக்கலாம்.
இதன் தொடர்களில் உறுப்புச் சொற்கள் குறைந்து/
முறைமாறி இயல்கின்றன. அந் நிலையில்,
இறலீனும் எண்ணாது வெஃகின்; விறலீனும்
வேண்டாமை என்னுஞ் செருக்கு (180 )
என்னும் இரண்டு தொடர்களால் ஆன
குறட்பா விளக்கவேண்டியதாக உள்ளது.
v தீய
பின்விளைவை எண்ணாமல் பிறர்
பொருளைக் கைப்பற்ற விரும்புவது அழிவை ஏற்படுத்தும்.
Ø பிறரது
பொருளை விரும்பாத மனநிலை நிலையான வெற்றியை
விளைவிக்கும்.
என்று உரைநடையில் அமைக்கும்போது, முதல் தொடரில் நீ என்னும் எழுவாய் செய்யுள் தொடரில் மறைந்துள்ளதோடு, இவ் இரு தொடர்களிலும் உறுப்புச்
சொற்கள் இடம் மாறி அமைந்துள்ளதை அறியலாம். முதல் தொடருக்கு நீ என்னும் தோன்றா எழுவாயும், இரண்டாம் தொடருக்குச் செருக்கு எழுவாயாகவும் அமைகின்றன. இறல், விறல் ஆகியன முறையே செயப்படுபொருளாகின்றன. இவ்
இரண்டு தொடர்களுக்கும் ஈனும் என்னும் ஒன்றன்பால் வினைமுற்றுகள்
இயல்கின்றன. இங்ஙனம் செய்யுள் தொடரை உரைநடைத் தொடராக்கினால் கடினத்தன்மை நீங்கிப் புரிதிறன்
மேம்படும். இக் குறட்பாவின் ஆங்கில மொழிபெயர்ப்பும் கீழ்வருமாறு இரண்டு தொடர்களில்
அமைகின்றது :
From
thoughtless lust of other's goods springs fatal ill,
Greatness of soul that covets not, shall triumph still. ( போப்
)
நன்றி : https://www.ytamizh.com/thirukural/kural-180/
********
Comments
Post a Comment