தார்’ – சொற்பொருள் வரலாறு

பேராசிரியர் குழந்தைசாமி

            நெடிய தமிழ்ச் சொற்பொருள் வரலாற்றில் அரசியல், பண்பாடு, வேற்று மொழித் தாக்கம் போன்ற காரணங்களால் சொற்பொருளில் மாற்றங்கள் ஏற்படுகின்றன. அம் முறையில் தார் என்னும் பெயர்ச் சொல் பழங்காலந்தொட்டுத் தமிழில் வழங்குமாற்றை எடுத்துரைப்பதாக இக் குறிப்புரை இயல்கின்றது.

தார்:

   தொல்காப்பியத்தில் ” வருதார் தாங்கல்” ( நூற்பா 1010 அடி 15) என்னும் வழக்கில் முன்னணிப் படை என்றும், “ கண்ணியும் தாரும்” ( நூற்பா 1582 )  என்று மலர் மாலை என்னும் பொருளிலும், இரு வேறு பொருளில் ஒப்புருச் சொல்லாக இயல்கின்றது.  சங்க இலக்கியங்களிலும் சிலப்பதிகாரத்திலும் இம் முறை தொடர்கின்றது. இக்காலத் தமிழில்,

Ø  வாழைத் தார் என்று வாழைச் சீப்புகளின் அடுக்கைக் குறிக்கின்றது

Ø  தார்ச் சாலை என்று சாலையமைக்கப் பயன்படும் கருப்புத் திரவத்தைச் சுட்டுகின்றது

Ø  தார்ப் பாலைவனம் என்று இராசசுதான் மாநிலத்திலுள்ள வறண்ட பகுதியைக் குறிக்கின்றது

ஆகவே, பழந்தமிழ் இலக்கியங்களைக் கற்கும்போது தார் முன்னணிப் படை/ பூ மாலை ஆகிய பொருளிலும், தற்காலத் தமிழில் மாறுபட்ட கருத்திலும் இயல்வதை அறிந்து தெளியலாம்.

                                                பயன்பட்டது

வ. ஜெயதேவன்(பதி.) 2004, தொல்காப்பிய அகராதி, சென்னைப் பல்கலைக்கழகம்.

                                                          ******

Comments

Popular posts from this blog

தற்காலப் பொருண்மையியல் ஆய்வுக்குத் தொல்காப்பியத்தின் கருத்தளிப்பு