தூரன் கண்ட அறவியல் : காந்தீயம்

பேராசிரியர் குழந்தைசாமி, புதுச்சேரி

            இலக்கியங்கள் மானுட மேன்மைக்கான கொள்கை வரைவுகளாக இயலவேண்டும் என்பது அறிவியல் திறனாய்வின்  கொள்கையாகும். பழங்காலந்தொட்டு மக்களை நெறிப்படுத்தும் விழுமியங்களை இலக்கியங்கள் எடுத்துரைக்கின்றன. மக்களின் அன்றாடச் சிக்கல்களை / சமூகச் சீர்கேடுகளை மனித உரிமை நோக்கில் இக்காலப் புத்திலக்கியங்கள் நடப்பியலாக வெளிப்படுத்தித் தீர்வையும் முன்மொழிகின்றன. படைப்பாளரின் சமூக மேம்பாட்டு அக்கறையும் தீமை மீதான அறச் சீற்றமும் இதற்கு அடிப்படையாகும். நல்லாசிரியராகவும் திறன்மிக்க படைப்பாளராகவும் வளர்ச்சியில் வேட்கைகொண்டு இருபதாம் நூற்றாண்டில் பன்முகப் பங்களிப்பால் பெருமைகொண்ட பெரியசாமித் தூரன் ’இளந்தமிழா’ நூலில் ” பாரினில் புதுநெறியைப் பரப்பிடவே காந்தி வந்தார்” (ப. 62) என்று அண்ணல் காந்தியடிகளைப் போற்றியதோடு, அவரது கொள்கைகளை விளக்கிப் பாக்களையும் படைத்துள்ளார். தனி மனித வளத்திற்கும், சமூக நல்லிணக்கத்திற்குமான இவற்றை இளைஞர்கள் உணர்ந்து வளம் பெறலாம்.

காந்தீயம் ஓங்குக:

                அண்ணல் காந்தியடிகள் அறிவுறுத்திய விழுமியங்களை

v  அறிவினை ஆக்கத்திற்கு மட்டுமே பயன்கொள்ளவேண்டும்

v  அன்பு, அக்கறை, நேர்மை ஆகியன அனைவரிடமும் நிலவவேண்டும்

v  யாருக்கும் எவ் உயிர்க்கும் இன்னா செய்யக்கூடாது

v  வெறுப்பினை அன்பால் வெல்லவேண்டும்

v  செருக்கினைத் தன்னடக்கத்தால் முறியடிக்கலாம்

v  இன்முகத்தால் / நகையால் பகைமையை வெல்லலாம் (பக். 62,63)

 

என்றவாறு வகுத்துரைத்து, 

            இன்புற்றிருந்திடுவீர் ! இவ் உலகம் ஒரு வீடே !

            துன்பமில்லை; போருமில்லை ; சோதரரே அனைவோரும்!

            விண்ணின்பம் பெற்றிடலாம் விரிந்த உளப்பான்மையுடன்!

            கண் விழித்து நோக்கிடுவீர்! காந்தியுகம் தோன்றியதே! (ப. 64)

என்று அண்ணலின் இன்னா செய்யாமைக் கொள்கையின் அடிப்படையில் உயர் எண்ணங்களால், ஒற்றுமையால், உயிரிரக்கத்தால் இன்புற்றிடுக என்று பெரியசாமித் தூரன் கோருகின்றார். இவை இன்றைக்கும் தேவையானவை; வளர்ச்சியை வாய்ப்பாக்குபவை.                                               

                                                                             பயன்பட்டது

            https://www.tamilvu.org/library/nationalized/pdf/61-pe.thuran/237-elantamizha.pdf

                                                              *******

 

Comments

Popular posts from this blog

தற்காலப் பொருண்மையியல் ஆய்வுக்குத் தொல்காப்பியத்தின் கருத்தளிப்பு