தூவி: வள்ளுவக் கருத்துப் பொருண்மை 

                முனைவர் ப.கொழந்தசாமி, அரசினர் ஆய்வு நிறுவனம், புதுச்சேரி

            உயர்தனிச் செம்மொழியான தமிழின் சொல்லாய்வுக் களம் விரிந்து பரந்தது. கால வளர்ச்சியில் மொழி, சமூகம், பண்பாடு, பிற மொழித் தாக்குரவு போன்ற காரணங்களால் சொற்பொருளில் மாற்றங்கள் ஏற்படுவதோடு, புதிய சொற்களும் ஆக்கப்படுகின்றன. இதனால் ஓர் இலக்கியத்தைப் படிக்கும்போது, முறையாக உளங்கொள்ள அதிலாளப்பட்டுள்ள சொற்களின் கருத்தை நோக்கி உணரவேண்டும். அவ் வகையில் வள்ளுவம்தூவிஎன்கின்ற பெயர்ச்சொல்லை ஆண்டுள்ள சீர்மையை விளக்குவதாக இக் கட்டுரை அமைகின்றது.

தூவி: வழக்காறு :  தூ என்னும் பெயரடியாக , மென்மையானது என்னும் பொருளில் தூவி ( இறகுஎன்னும் பண்புச்சினைப் பெயரும், வினையடியாக பரவலாக வீசி என்னும் வினையெச்சமும் ஆகின்றன.

            மரபியலில் சொற்கள் தொடரில் அமைகின்ற பொருண்மை மரபை எடுத்துரைக்கின்ற தொல்காப்பியம், பறவைகள் பறக்க வாய்ப்பாகும் உறுப்பைச் சிறகு, தூவி ( நூற்பா 1548) என்று சுட்டுகின்றது. சங்க இலக்கியங்களிலும் [சிறு பைந்தூவிஅகநானூறு,பா 57:அடி 01] இவ் வழக்குக் காணப்படுகின்றது.

         இந்த மரபில், வள்ளுவம் மென்மையானது என்னும் பொருளில் தூவி ( இறகுஎன்னும் பண்புச்சினைப் பெயரை ஆண்டுள்ளது.

                அனிச்சமும் அன்னத்தின் தூவியும் மாதர்
            அடிக்கு நெருஞ்சிப் பழம் (1120)

 என்னும் குறட்பாவில் மென்மையின் உருவகமாகத் தூவி காட்சிப்படுத்தப்பட்- டுள்ளது. இத்தகைய படைப்பாற்றலாலும் சொற்பயிற்சியாலும் வள்ளுவம் மிளிர்கின்றது. சொல்லாட்சியை / நடையமைப்பை அறிந்து விளம்பப்படுகின்ற கருத்தறிந்து தெளியலாம். அப்போது படைப்பும் வாசிப்பாளரும் சிறப்படைவர்.

                                                 பயன்பட்டவை: இணையத் தரவுகள். 

Comments

Popular posts from this blog

தற்காலப் பொருண்மையியல் ஆய்வுக்குத் தொல்காப்பியத்தின் கருத்தளிப்பு