தொல்காப்பியத்தில் ’மை’ – பொருட்பன்மை
புதுச்சேரி
குழந்தைசாமி, பஞ்சலிங்கபுரம்
ஒட்டு மொழியான தமிழ்
மொழியின் சொற்பெருக்கில் ஓரெழுத்தொருமொழி ஒரு கூறாகும். அந்தச் சொல் வேறு இலக்கண வகையில்
இயல்வதுண்டு. கை, மை, அல் போல்வன இவண் நோக்கற்பாலன. [வருகை, ஆமை, கோரல்
]. இந் நிலையில் மை என்னும் சொல் பொருட்பன்மையில் தொல்காப்பியத்தில் இயலுமாற்றை
எடுத்து -ரைப்பதாக இக் குறிப்புரை அமைகின்றது.
தொல்காப்பியரின் இலக்கணக் கொள்கைகளால் அறிவதோடு, அவரது
நடையாலும் தமிழின் இயங்கியலைத் தெளியலாம். கீழ்வருகின்ற நூற்பாக்களை நோக்குக:
சேயோன்மேய
மைவரை உலகமும் ( நூ. 952)
மையறு
சிறப்பின் உயர்ந்தோர் ( நூ.1067)
இவற்றில், முறையே மேகம், குற்றம் ஆகிய தொடர்பற்ற கருத்தில்
மை இயல்கின்றது.
நன்றி:
வ. ஜெயதேவன், 2004, தொல்காப்பிய அகராதி, சென்னைப் பல்கலைக்கழகம். *********
Comments
Post a Comment