வள்ளுவத்தில்அன்று ‘ – கருத்தாய்வு

புதுச்சேரி குழந்தைசாமி, பஞ்சலிங்கபுரம்

உயர்தனிச் செம்மொழியான தமிழின் சொற்களம் விரிவும் நுட்பமும் கொண்டது. அதனால் முழுத் தொடரில் அமைத்துச் சொற்களின் கருத்தைச் சூழலுக்கேற்பத் தெளியவேண்டும். ஒவ்வொரு சொல்லும் பொருள் குறிப்பன; ஆயினும் அது தொடரில் உறுப்பாகும்போது கருத்து அறியப்படும். காட்டாக ஐ, பிடி போன்ற சொற்களைக் கருதலாம். அம் முறையில் அன்று என்னும் சொல் , சூழலுக்கேற்ப உறழ் பொருள் பயப்பதை எடுத்துரைப்பதாக இக் குறிப்புரை இயல்கின்றது.

அன்றுறிவாம் என்னாது அறஞ்செய்க; மற்றது
பொன்றுங்கால் பொன்றாத் துணை ( 36)

என்னும் குறட்பாவில் குறிப்பிட்ட / பின் நாளில் என்னும் பொருளில், இன்று போலுமாறு ஒன்றன்பால் காலப் பெயராக இச் சொல் அமைகின்றது. அடுத்து,

நன்றி மறப்பது நன்றுன்று ; நன்றல்லது
அன்றே மறப்பது நன்று (108)

என்னும் குறட்பாவில் அன்று என்னும் சொல், அல்ல என்கின்ற பொருளில் ஒன்றன்பால் குறிப்பு வினைமுற்றாகவும்,  அப்போதே  என்னும் பொருளில் பெயராகவும் இயல்கின்றது.

            இங்ஙனம் ஒரு சொல் ஒலி/ வரி வடிவ மாற்றமின்றி, மாறுபட்ட கருத்தில் பலபொருட்சொல்லாய்ப் பயில்வது மொழியில் இயல்பானது; சூழல் கருத்தறிந்து தெளிவது பயனாளர் கடமையாகும். இவ்வாறு கருத்தைத் தெளியின் இலக்கியப் பயன் வாய்க்கும்.

  நன்றி : ஈனையத் தரவுகள்                          ******

           

           

 

 

Comments

Popular posts from this blog

தற்காலப் பொருண்மையியல் ஆய்வுக்குத் தொல்காப்பியத்தின் கருத்தளிப்பு