பழந்தமிழில் வாகை – பொருண்மை நோக்கு
புதுவை
குழந்தைசாமி, பஞ்சலிங்கபுரம்
இயற்கையோடு இயைந்து புறப்
பண்பாட்டுத் தாக்கமில்லாத மேன்மையான இயல்நெறி வாழ்க்கை வாழ்ந்த பழந்தமிழர் பல்லுயிர்
வளத்தைப் போற்றினர். அதனால் கருத்துவிளக்கத்திலும்
போரியலிலும் வாகைப் பூ போன்ற இயற்கைப் பொருட்களை ஈடுபடுத்தினர். சங்க இலக்கியங்களில் வாகை என்னும் ஒன்றன்பாற் பெயர்ச்சொல் ஒப்புருச்
சொல்லாக [ பல பொருளில் ] இயல்வதை விளக்குவதாக
இக் குறிப்புரை அமைகின்றது.
இச் சொல் வாகைப் பூவைக்
குறிப்பதாக, பெரும்பாணாற்றுப்படை { அடி 109 ], குறிஞ்சிப் பாட்டு { அடி 67 ], பதிற்றுப்பத்து [ பா43
அடி 23 &
பா 88 அடி 10 ]
பரிபாடல் [பா 14 அடி
07] ஆகிய அடிகளில் இயல்கின்றது. இவற்றுள் பெரும்பாணாற்றுப்படை
”புகழா வாகைப் பூ” என்று வாகைத் திணையிலிருந்து பூவைப் பிரித்துக்காட்டுகின்றது.
இச் சொல் வாகை மரத்தைச்
சுட்டுவதாக, குறுந்தொகை { பா
07 அடி 05 & பா 347 அடி
02 & பா 369 அடி 01 ], பதிற்றுப்பத்து [
பா40
அடி 15 &பா 66 அடி
15 ], அகநானூறு [ பா 136 அடி 10 & பா 199 அடி
19 ] ஆகியவற்றில் இயல்கின்றது. இவற்றுள் பதிற்றுப்பத்து [பா40
அடி 15] வாகை மரத்தை நன்னனின்
காவல் மரமாகக் குறிப்பிடுகின்றது.
இச் சொல் ஊர்ப் பெயராக, குறுந்தொகை [ பா 393 அடி 03] , அகநானூறு [ பா
125 அடி 19 ], புறநானூறு [ பா 351 அடி 06 ] ஆகியவற்றில் இடம்பெறுகின்றது. இவற்றுள்
புறநானூறு வாகையை எயினனின் ஊராகக்
காட்டுகின்றது.
இவ்வாறு வாகை என்னும் பெயர்ச்சொல் பூ, மரம், ஊர்
ஆகியவற்றைச் சுட்டுவதாகவும் வரலாற்றுத் தகைமை கொண்டதாகவும் ஒப்புருச் சொல்லாக இயல,
தொல்காப்பியம் புறத்திணையாக மனிதவளக் கொள்கையாக, இதை வெற்றியின் குறியீடாக இலக்கணப்படுத்தியுள்ளது.
நன்றி : இணையத் தரவுகள் ******
Comments
Post a Comment