கண்மாறல் : ஒருசொல் -கருத்தாய்வு

புதுவை குழந்தைசாமி, பஞ்சலிங்கபுரம்

            மொழியாலான கவின்நுண்கலைப் படைப்பான இலக்கியம் சொல்லாட்சியில் புதுமை/நுட்பங்களை ஆள்கின்றது. மரபுத்தொடர் போன்ற சிறப்புச் சொற்களைத் திறமையாகக் கையாண்டும் புதிதாகப் படைத்தும் மாற்றியும் பொருள் நுட்பத்தை வாய்ப்பாக்குகின்றது. இதை உரை விளக்கித் தெளிவுறுத்துகின்றது.

மலர்காணின் மையாத்தி நெஞ்சே! இவள்கண்
பலர்காணும் பூவொக்கும் என்று ( குறள் 1112 )

என்னும் குறட்பா உரையில் பரிமேலழகர், “மையாத்தல்: ஈண்டு ஒவ்வாதவற்றை ஒக்கும் எனக் கோடல்; இறுமாத்தல் செம்மாத்தல் என்பன போல ஒரு சொல்என்று விளக்கியுள்ளார். இதனால் வடிவ நிலையில்  இரண்டு சொற்களின் கூட்டாகத் தோன்றுகின்ற சில சொற்கள், பொருள் நிலையில் ஒரு சொல்லாக இயல்வதை அறியலாம் . இவ்வாறே,

            பிறனைக் கொலையொக்கும்கொண்டு கண்மாறல்  ( நான்மணிக்கடிகை பா 06 அடி 04 )

என்னும் அடியிலும் கண்மாறல் என்னும் சொல் கைவிரித்தல் / ஏமாற்றுதல் என்னும் கருத்தில் ஒரு சொல்லாகப் பயில்கின்றது. இத்தகைய சிறப்புப் பயன்பாட்டை அறிந்தால் செய்யுள் சொல்லுக்கு முறையாகக் கருத்துணரலாம்.

            நன்றி : இணையத் தரவுகள்.                                   ******

             

Comments

Popular posts from this blog

தற்காலப் பொருண்மையியல் ஆய்வுக்குத் தொல்காப்பியத்தின் கருத்தளிப்பு