எண்ணுப்பெயரை எண்ணுமுறைப் பெயராக்கல்

 ( Cardinal number > Ordinal number  )

புதுவை குழந்தைசாமி, பஞ்சலிங்கபுரம்

                மனித உறவாடல் கருவியான மொழியை மக்கள் தம் தேவைகளையும் நோக்கங்களையும் நிறைவேற்றப் பயன்படுத்துகின்றனர். அதற்காகப் பல வகைச் சொற்களை ஆக்குகின்றனர். இது தொடர்கின்ற அறிவாக்க நிகழ்வாகும். அந் நிலையில் எண்ணுப் பெயர்கள் குறிப்பிடத்தக்கன. வணிகம், பொருளாதாரம், அளவீடு ஆகிய தளங்களில் எண்ணுப் பெயர்கள் இன்றியமையாதன. இவை முழு/ பின்ன எண்களாக இயல்கின்றன. எத்தனை? என்று வினவும்போது எண்ணுப்பெயரில் 10. 120 என்று விடையிறுக்கின்றனர். இதுவே பெரும்பான்மை. ஆயினும் மற்றொரு தேவையான எத்தனையாவது? என்று அறிய விரும்பும்போது பத்தாவது, நூறாவது என்று எண்ணுமுறைப் பெயரால் குறிக்கப்படுகின்றன. தமிழில் 10 என்னும் எண்ணுப்பெயரை 10ஆவது அல்லது 10ஆம் என்று, ஆவது/ஆம் என்னும் ஒட்டுச் சேர்த்து எண்ணுமுறைப் பெயராக மாற்றலாம். பிறவும் இவ்வாறே. ஆனால் இது ஒன்று என்னும் எண்ணுக்குப் பொருந்தாது, ஒன்றோடு ஆம் சேர்த்தால் முதல் என்றே மாறும்; ஒன்றாம்  என்று நிலையாது. முதல் வகுப்பு; இரண்டாம் வகுப்பு/ முதல் பரிசு; இரண்டாம் பரிசு என்னும் ஆட்சிகள் நோக்கத்தக்கன. பின்வரும் ஆங்கில விளக்கத்தையும் கருதலாம்:

Cardinal numbers are used to count objects or things, while ordinal numbers are used to show the order or position of objects or things.

----------

Comments

Popular posts from this blog

தற்காலப் பொருண்மையியல் ஆய்வுக்குத் தொல்காப்பியத்தின் கருத்தளிப்பு