திருக்குறளில் என்ன’ – கருத்தாய்வு

புதுவை குழந்தைசாமி, பஞ்சலிங்கபுரம்

               

இலக்கியத்தில் பயில்கின்ற ஒவ்வொரு சொல்லும் மதிப்புமிக்கவை; கருத்துப் பொதிந்தவை. அதிலும் அற இலக்கியச் சொல்லாடல் நோக்கித் தெளியத்தக்கது. இந் நிலையில் என்னஎன்னும் சொல் வள்ளுவத்தில் பலபொருட்சொல்லாக இயல்வதை எடுத்துரைப்பதாக இக் குறிப்புரை அமைகின்றது.

குறட்பா எண்

சொல்லாட்சி

கருத்து

144

என்னாம் [என்ன+ஆகும் ]

வினா மூலம் வற்புறுத்தல்

705

என்ன

ஒன்றுமில்லை என உறுதிப்படுத்தல்

987

என்ன

வினா மூலம் வற்புறுத்தல்

1100

என்ன

ஒன்றுமில்லை எனஉறுதிப்படுத்தல்

1122

என்ன

அதைப் போன்றது என்று உவமித்தல்

 

இவ் அட்டவணையால் வினாவாகவும் உவம உருபாகவும் என்ன பயில்வதையும் வினாவழியே வற்புறுத்தல், உறுதிப்படுத்தல் ஆகிய கருத்தாக்கங்களை வள்ளுவம் விண்டுரைப்பதையும்,

உடம்பொடு உயிரிடை என்னமற் றன்ன
மடந்தையொடு எம்மிடை நட்பு ( 1122 )

என்னும் குறட்பாவில் பொருத்தமான உவமையினால் காதல் ஈர்ப்பை என்ன மூலம் வெளிப்படுத்துவதையும் தெளியலாம். இவ்வாறு வள்ளுவச் சொல்லாட்சி நுட்பமானதாக அமைந்துள்ளது.

 நன்றி: இணையச் செய்திகள்                  -------------

Comments

Popular posts from this blog

தற்காலப் பொருண்மையியல் ஆய்வுக்குத் தொல்காப்பியத்தின் கருத்தளிப்பு