வள்ளுவம் கண்ட ‘ நல்லாள்’ - உயர்வுப் பொருண்மை
புதுவை குழந்தைசாமி, பஞ்சலிங்கபுரம்
மக்களின்
மேன்மைக்காகப் படைக்கப்பட்ட திருக்குறள் மக்கள் மொழியிலும் விழுமியங்களை விளம்புகின்றது.
அதனால் இலக்கிய விழுமியங்கள் எளிதில் மக்களைச் சென்றடைந்து ஏற்கப்படுகின்றன.
உயர்ந்த பண்புகளையுடைய/ வளமையான சிறந்த பெண்ணை
நல்லாள் என்பர்.
இச் சொல்லைக் கீழ்வருகின்ற 924,
1040 ஆகிய இரண்டு குறட்பாக்களில் திருக்குறள் ஆண்டுள்ளது.
நாண்என்னும் நல்லாள் புறங்கொடுக்கும்; கள்ளென்னும்
பேணாப்
பெருங்குற்றத் தார்க்கு ( 924 )
என்னும் குறளில்
நாணத்தைச் சீர்மை சான்ற உயர்ந்த பெண்ணாக உருவகித்துக் காட்சிப்படுத்துகின்றார். போதைப் பழக்கம் தீமைகளை வாரிக்கொடுக்கின்ற
பெருங்குற்றமும் பிறழ் உணர்ச்சியும் ஆகும். போதைக்கு அடிமையானவனுக்குத் தீமை / அவமானம்
/ புறக்கணிப்பு ஆகியன பற்றிய நாணம் ஏற்படாது . ஆகவே போதைப் பொருட்களை முற்றிலும் தவிர்த்துவிடுக
என்று இக் குறட்பா வலியுறுத்துகின்றது. அடுத்ததாக,
இலமென்று அசைஇ இருப்பாரைக் காணின்
நிலமென்னும்
நல்லாள் நகும் ( 1040 )
என்னும் குறட்பாவில்
விளைநிலத்தை ‘ வளமுள்ள / பெருக்க ஆற்றலுள்ள ‘பெண்ணாக உருக்காட்சிப்படுத்துகின்றார். விளைச்சலை வாய்ப்பாக்குகின்ற விளைநிலத்தின்
வளமையை வாய்ப்பாக்குக; வேலை வாய்க்கவில்லை என்று நொந்துபோகாதே என்று திருவள்ளுவர் வழிகாட்டுகின்றார்.
இதனால் பொல்லாத போதையை விரும்பாதே ; வேலை
வாய்க்கவில்லை என்று நொந்துபோகாதே ; மாற்று வழி காண்க என்னும் மனித மேம்பாட்டுக்கான
கொள்கைகளைத் தெளியலாம். இவை மானுட வெற்றியை வாய்ப்பாக்குவன.
நன்றி : இணையத் தரவுகள் *******
Comments
Post a Comment