நேருக்கு நேர்திரைப்படப் பாடலில் திருக்குறள் அடி

பேராசிரியர் புதுவை குழந்தைசாமி, பஞ்சலிங்கபுரம்

            விளம்பு விழுமியங்களாலும் இலக்கிய முருகியலாலும் சால்புடைய திருக்குறள் காலந்தோறும் படைப்பாளிகளின் கவனத்தை  ஈர்த்துவருகின்றது. திருவள்ளுவர் காலம் தொடங்கி இக்கால இலக்கியங்கள் வரை வள்ளுவத்தின் தாக்கமும் செல்வாக்கும் படைப்புகளில் வலுவாகத் தொடர்கின்றன. அந் நிலையில் 1997ஆம் ஆண்டு வெளியான ’ ’நேருக்கு நேர்படத்தில் வைரமுத்து இயற்றிய ‘அவள் வருவாளா’ என்று தொடங்குகின்ற இன்பாடல் திருக்குறளின் தாக்கமுற்றதாகத் திகழ்கின்றது. காதல் உளவியலை மையமிட்ட இப் படத்தில் கதைத் தலைவன் காதலியின் வரவைவேண்டி, அவளால் ஏற்பட்ட தாக்கத்தைத் தாகத்துடன் தோழனிடம் எடுத்துரைக்கும்போது, தலைவி கண் பார்வையின் ஈர்ப்பாற்றலை விளக்கி, தன் காதல் உணர்ச்சியை விவரிக்கும்போது,

கண்டு கேட்டு உண்டுயிர்த்து உற்றறியும் ஐம்புலனும் பெண்ணில் இருக்கு

என்று பாடுகின்றான். அதாவது கலவியில் ஒரே பொருளான் ஓரிடத்தில் ஒருசேர ஐம்புலன்களுக்கும் நிறைவான இன்பம் கிடைப்பதை விளக்குகின்றான். இது,

கண்டுகேட்டு உண்டுயிர்த்து உற்றறியும் ஐம்புலனும்
ஒண்தொடி கண்ணே உள (1101)

என்னும் குறட்பாவின் அடிகளாகும். இத்தகைய உளவியல் பரிபாடலின் இருபதாம் பாவின் 50ஆம் அடியிலும் பயில்கின்றது. வைரமுத்துவின் இலக்கியப் புலமை இதை வாய்ப்பாக்கியுள்ளது. வளரிளமைப் பருவத்தினர் இத்தகைய காம அறங்களை அறிதல் சிறப்பானதாகும்.

            நன்றி: இணையத் தரவுகள்          ^^^^^^^

 

 

 

Comments

Popular posts from this blog

தற்காலப் பொருண்மையியல் ஆய்வுக்குத் தொல்காப்பியத்தின் கருத்தளிப்பு