திருக்குறள் சுட்டுகின்ற ‘தவறு’கள்
புதுவை
குழந்தைசாமி, பஞ்சலிங்கபுரம்
அற இலக்கியமான வள்ளுவம் மனித எண்ணங்களையும்
செயல்பாட்டினையும் கூர்ந்துநோக்கிப் புல்லுக [கற்க] ; தள்ளுக [பொய்யற்க] என்னும் வாய்பாட்டிலும்
உடைமை [ ஊக்கமுடைமை ] ; ஆமை [ கொல்லாமை] என்னும்
பின்னொட்டுகளாலும் அறக் கொள்கைகளை வகுத்துரைக்கின்றது. உடன்பாட்டில் அறையப்பட்டவற்றை
வளர்த்தும், எதிர்மறையில் குறிக்கப்பட்டவற்றை விலக்கியும் வாழ்ந்தால் அனைவரும் சிறக்கலாம்.
இம் முறையில் வள்ளுவம் சிலவற்றைத் தவறு என்று சுட்டுகின்றது. பழந்தமிழ்ப் பல்பொருட்
பெயர்ச்சொல்லான ’தவறு’ வள்ளுவத்தில் பயில்வதைக் கீழ்வருகின்ற அட்டவணையால் அறியலாம்:
|
குறள் எண் |
சொல்லாட்சி |
கருத்து |
|
469 |
தவுறு |
பிழை |
|
1154 |
தவறு |
குற்றம் |
|
1286 |
தவறு |
பிழை |
|
1321 |
தவறு |
குற்றம் |
|
1325 |
தவறு |
குற்றம் |
இவற்றுள் பொருட்பாலில் 469ஆம் குறட்பாவில் மட்டும்/ காமத்துப்பாலில் மேற்படி நான்கு குறட்பாக்களில் ஐந்து
முறையும் ‘தவறு’ இயல்கின்றது. தனிமனித ஆளுமையை
வலியுறுத்துகின்ற அறத்துப்பாலில், ஒருவனைக் குறிப்பிட்டு இக் கருத்து இயலவில்லை. இவற்றால்
அறிவுறுத்தப்படுகின்ற அறச் செயல்கள்:
v பயனாளியின்
பண்பறிந்து நன்மைபுரிக.
v அன்புரையை
நம்பவேண்டும்
v தலைவனை
நேரில் காணும்போது தவறு தெரிவதில்லை
v தவறுக்காக
அல்லாமல் அன்பின் மிகுதியால் தலைவி ஊடுவாள்
v பிரிவு
ஏக்கத்தைத் தரும்
இவற்றுள் மனிதர்களின் பன்முகத் தன்மையை
/ புரிதிறன் ஆற்றலை 469ஆம் குறட்பா அடையாளப்படுத்துகின்றது. காமத்துப்பாலிலுள்ளவை அன்புப்
பிணைப்பையும் பிரிவின் கொடுமையையும் சுட்டுகின்றன. இங்ஙனம் வள்ளுவத்தில் பயில்கின்ற
ஒவ்வொரு சொல்லும் அறவியல் கலைச்சொல்லாக/ நுட்பமானதாக அமைந்துள்ளதால் பயில் / தொடர்ச்
சூழல் கருதித் தெளிந்தால், விழுமியத்தை விளங்கிக் கொள்வதோடு திருவள்ளுவரின் படைப்பாற்றலையும்
அறியலாம்.
நன்றி: இணையத் தரவுகள் *****
Comments
Post a Comment