வள்ளுவத்தில்பற்று’ – சூழற் பொருண்மை

.கொழந்தசாமி, அரசினர் ஆய்வு நிறுவனம், புதுச்சேரி

பல்வேறு சிறப்புகளைக் கொண்ட திருக்குறள் பொருண்மையியல் ஆய்வுக் களமாகவும் திகழ்கின்றதுவள்ளுவத்தின் சொல்லாட்சி, தொடரமைப்பு நுட்பங்கள் ஆகியன உற்றுநோக்கி அறியத்தக்கன. இந் நிலையில் பற்று என்னும் பலபொருட்சொல் வள்ளுவத்தில் இயலுமாற்றை எடுத்துரைப்பதாக இக் குறிப்புரை அமைகின்றது.

பற்று:

            தடி, படி, ஆடு, நாடு, நகை, இல் போன்ற சொற்கள் பெயராகவும் வினையாகவும் இயல, மா போன்றவை பெயராகவும் உரியாகவும் பயில்கின்றன. அவ்வாறே பற்று என்பதும்  வள்ளுவத்தில் பெயராகவும் வினையாகவும் ஆளப்பட்டுள்ளது.

            88, 275, 347, 349, 350, 438, 506, 521, 606, 747, 748, 852, 856, 956 ஆகிய எண்ணுள்ள 14 குறட்பாக்களில் பற்று இயல்கின்றது. வற்றின் கருத்தையறியப், பின்வருநிலையணி அமைந்த  பின்வருகின்ற குறட்பாவை நோக்கலாம்:

பற்றுக பற்றற்றான் பற்றினை அப் பற்றைப்
பற்றுக பற்று விடற்கு ( குறட்பா 350)

    இதில் ,      பற்றுக = வியங்கோள் வினை = இடைவிடாமல் நினைத்தல்

                      பற்று = பெயர் =விருப்பு வெறுப்பு         என்று இயல,

                     முற்றாற்றி முற்றி யவரையும் பற்றாற்றிப்
                     பற்றியார் வெல்வது அரண் ( குறட்பா 748 )

                           பற்று = ஆகுபெயர் = இடம் / உள்ளே

                             பற்றியார் = வினையால்ணையும் பெயர்மதிலுக்கு உள்ளே இருப்போர்

என்று இயல்கின்றது.

            இவ்வாறு சூழலுக்குத் தக்கவாறு  பற்று பெயராகவும் வினையாகவும் பொருட்பன்மையில் இயல்வதை நோக்கி முறையாக்க் கருத்தறிந்தால் பொருட் புலப்பாடு சிறக்கும். இங்கு ,

            பற்றுவிடு கிளவி…… (நூற்பா 596 அடி 07) = பெயர் = தொடர்பு

என்னும் தொல்காப்பிய நூற்பா ஒப்பத்தக்கதுஇன்றைய வழக்கில் பயில்கின்ற பற்றுவரவு, பற்றுக்கோடு போல்வன இவண் கருதத்தக்கன.

                                                            பயன்பட்டவை

சாமி வேலாயுதம்பிள்ளை ( தொகு.), 2002, திருக்குறட் சொல்லடைவு, சென்னை; தென்னிந்திய தமிழ்ச் சங்கம்.

ஜெயதேவன்,. (பதி.) 2004, தொல்காப்பிய அகராதி, சென்னைப் பல்கலைக்கழகம்.

                                                                      *****

Comments

Popular posts from this blog

தற்காலப் பொருண்மையியல் ஆய்வுக்குத் தொல்காப்பியத்தின் கருத்தளிப்பு