இளைஞா புறப்படு!
குழந்தைசாமித் தூரன், புதுச்சேரி.
இளைஞர் நலமே இகத்தின் வளமாம் !
இளைஞா உணர்ந்திடு ! இன்றே புறப்படேல்!
அச்சம் அகற்றிடு! ஆண்மை பெருக்கிடு !
உலகின் இயல்பறி! உழைத்தே உயர்ந்திடு !
உண்மை உணர்ந்து உன்னதம் ஊக்கேல் !
உறக்கம் தெளிந்திடு ! உற்சாகமாயிரு !
உற்றவர் உறவு பேணி உலகநலம் போற்றேல்
!
கவசம் அணிந்து கைகழுவி இடைவெளி பின்பற்று
!
தாய்மொழி போற்றிடு ! தமிழை வளமுறுத்து !
திறன் வளர்த்துத் தடைகளைத் தகர்த்திடு !
தொற்றுநோய் தொலைந்திடத் தூய்மை துலக்கு !
போதை மறுத்திடு ! பொய்ம்மை வெறுத்திடு !
வள்ளுவ வாய்மையை வாழ்க்கை நெறியாக்கிடு !
வறுமை நோயல்ல; வாட்டம் அகற்றிடு !
வானுயர உயர்ந்திடு ! வாழ்க்கை வளப்படுமே !
Comments
Post a Comment